Pages

Monday, 20 April 2026

சிலப்பதிகாரம் காட்டும் இசை Music

சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம். இசை, கூத்து பற்றிய இலக்கணங்களும், நிகழ்வுகளும் இதில் உள்ளன. 

கனல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, ஊர் சூழ் வரி, வாழ்த்துக் காதை, வரந்தரு காதை ஆகியவற்றில் இவற்றைக் காணலாம். 

வரி என்பது இசை
குரவை என்பது கூத்து

இவற்றை 
வரி
ஆடல் 
என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது ( 3-29)

இசை இலக்கணமும், நாடக நெறிமுறைகளும் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளன. 

கடலாடு காதையில் மாதவி ஆடிய  பதினோர் ஆடல் காட்டப்படுகிறது. 

கானல் வரி என்னும் காதைப் பிரிவில் ஆற்று வரி, சார்த்து வரி, முகமில் வரி, நிலை வரி, முரி  வரி, திணைநிலை வரி - முதலான வரிப்பாடல் வருகின்றன. இவை மூன்றடுக்கு நிலையிலும், அடுக்கில்லா நிலையிலும் வருகின்றன. இவை இசைப் பாடல்கள். 

வாழ்த்துக் காதையில் அம்மானை வரி, கந்துக வரி, ஊசல் வரி ஆகியவற்றில் மூன்றடுக்குப் பாடல்கள் வருகின்றன. கலித்தொகையில் வரும் இத்தகைய பாடல்களைத் தாழிசை என்கிறோம். 

கலி என்பது துள்ளும் ஓசை. இப்பாடலில் வரும் தாழிசை என்பது கதவைத் தாழ்ப்பாள் போட்டுத் திறப்பது போல் ஒலிக்கும் ஓசை. தாழிசை என்னும் சொல்லே அதனை *இசை* எனச் சுட்டுகிறது. இது இசைத்தமிழ்.

உ. வே. சாமிநாதையர் முகவுரை கூறுகிறது


இந்த நூலுக்கு அடியார்க்கு நல்லார் உரை முதலிலிருந்து வழக்குரை காதை வரையில் மட்டுமே உள்ளது. கானல்வரி பகுதிக்கும், வழக்குரை காதை பிற்பகுதிக்கும் உரை கிடைக்கவில்லை. 

இசை, கூத்து ஆகியவற்றுக்கான குறிப்புகள் அரும்பதவுரைஉரையிலிருந்தும், கிடைத்த சடபுடவெண்பா, தாளசமுத்திரம், சுத்தாநந்தப்பிரகாசம் என்னும் நூல்களிலிருந்தும் திரட்டப்பட்டவை. 

ஊர்காண் காதையில் நவமணி இலக்கணம் கூறப்பட்டுளது. இது வடமொழியில் கூறப்படும் இலக்கணத்திலிருந்து மாறுபடுகிறது. 
 

No comments:

Post a Comment