கண்ணகி சோழ நாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டில் கணவனை இழந்து, சேர நாட்டில் நடுகல் தெய்வம் ஆனவள்.
இவள் வரலாற்றை, துறவு பூண்ட சேர இளவரசன் சிலப்பதிகாரம் என்னும் முத்தமிழ்க் காப்பியமாகப் பாடியிருக்கிறார்.
கண்ணகி வாழ்க்கை பற்றி இவர் கூறும் செய்திகளைச் சில பகுதிகளில் தொகுப்பாகப் பார்க்கலாம்.
தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம்.
நூல்
1
திங்கள், ஞாயிறு, மழை மூன்றையும் வாழ்த்தி நூல் தொடங்குகிறது. அடுத்து, காப்பியத் தலைவியின் ஊர் புகார் நகரை வாழ்த்தி தோற்றுவாய் செய்கிறது. --- போற்றுதும்
கண்ணகி திருமணம்
அவ்வூர் மக்கள் அச்சமின்றியும், வேறு ஊருக்குக் குடிபெயரும் எண்ணம் இல்லாமலும், அறிவிலும் செல்வத்திலும் உயர்ந்தவர்களாக வாழ்ந்துவந்தனர். --- மக்கள்
புகார் நகரில் வாழ்ந்த மாநாய்கன் கடல் வாணிகத்தால் ஈட்டிய பெருஞ்செல்வன். அவன் மகள் கண்ணகி. அழகும் பண்பும் நிறைந்தவள். --- கண்ணகி
அவ்வூரில் தன் செல்வத்தைப் பிறருக்காகப் பயன்படுத்திக்கொண்டு வாழ்ந்த மற்றொரு வணிகன் மாசாத்துவான். நில வாணிகன். இவன் மகன் கோவலன். --- முருகன் போன்றவன்
பெற்றோர் விருப்பப்படி, கண்ணகிக்கும் கோவலனுக்கும் மணப்பந்தலில் மண முழக்கத்துடன் திருமணம் நடைபெற்றது. பார்ப்பான் வேள்வித் தீ முன் திருமணத்தை நடத்தி வைத்தான். மகளிர் மங்கலப் பொருள்களுடன் அணிவகுத்து, கண்ணகியை அழைத்துச் சென்றனர். மலர் தூவிய மெத்தையில் இருக்கச் செய்தனர். காதலனைப் பிரியாமல் வாழ்க என வாழ்த்தினர். --- திருமணம்
இந்த நிகழ்வுகளைச் சொன்ன பாடல் அரசனை வாழ்த்துகிறது. --- செம்பியன்
2
தனிக் குடித்தனம்
கோவலனும் கண்ணகியும் மேல்மாடி மெத்தைப் படுக்கையில் திளைத்துக்கொண்டிருக்கின்றனர் --- இருந்துழி
மாடிச் சாரளத்தின் வழியே பூ மணத்துடன் தென்றல் நுழைந்து வீசும்போது இருவருக்ககும் காதல் உணர்வு மேலிடுகிறது. --- அரமியம்
கோவலன் கண்ணகியின் தோளின் முன்பக்கத்தில் தொய்யில் எழுதி, மாலை அணிவித்து, தன் மாலையும் அவள் மாலையும் கசங்குமாறு அவளைக் கட்டித் தழுவுகிறான். அவள் அழகைச் சொல்லிப் பாராட்டுகிறான். --- தழுவல்
இட்டுக்கட்டிப் பாராட்டுகிறான் --- குறியாக் கட்டுரை
மயில் அன்னம் கிளி கண்ணகியிடம் தோற்றனவாம். --- எப்படி
மங்கல அணி போதுமே. பிற அணி எதற்கு? மேனி மணம் போதுமே. பூச்சு எதற்கு? --- என் உற்றனர் கொல்
பொன்னே! முத்தே! கரும்பே! தேனே! --- உலவாக் கட்டுரை
இப்படிப் பாராட்டி மகிழ்ந்தவண்ணம் தனிக்குடித்தனம் நடத்திக்கொண்டு சில ஆண்டுகள் இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்நதனர்.
தொலையாத இன்பமெல்லாம் துய்த்தனர்.
No comments:
Post a Comment