8
மாதவி ஓலை அனுப்புகிறாள்
- தமிழகத்தில் இளவேனில் காலம்.
- காமம் உண்டாக்கும் தென்றல் வீசிற்று. குயில் கூவிற்று.
- கோவலனைப் பிரிந்த மாதவி ஒப்பனை செய்துகொண்டு மேல்மாடியில் அமர்ந்து யாழிசை கூட்டி ஏதோ மயக்கத்தில் பாடிக்கொண்டிருந்தாள்.
- இலக்கண மரபில் பாடிக்கொண்டிருந்தாள்.
- தாழைமடல் ஓலையில் கோவலனுக்குக் கடிதம் எழுதினாள்.
- "மக்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் இளவேனில் அரசன், திங்கள் செல்வன் ஆகியோர் எனக்கு இன்பம் ஊட்டவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்" - என்று எழுதினாள்.
- ஓலையைத் தோழி வசந்தமாலை கையில் கொடுத்து, "கோவலனிடம் ஓலையைக் கொடுத்து. செய்தியை விளக்கிச் சொல்லி, அழைத்துவருக" என்றாள்.
- வயந்தமாலை கடைத்தெருவில் கோவலனைக் கண்டு ஓலையைக் கொடுத்தாள்.
- "மாதவி ஏமாற்றறு நாடகம் ஆடுகிறாள்" என்று கூறி, மாதவி எழுதிய ஓலையை வாங்க மறுக்கிறான்.
- வயந்தமாலை விரைந்து மீண்டு மாதவிக்குத் தெரிவிக்கிறாள்.
- மாதவி செய்வது அறியாமல் திகைக்கிறாள்.
9
மாலதி \ தேவந்தி
- மாலையில் மகளிர் விளக்கேற்றுகின்றனர்.
- மாலதி தன் மாற்றாள் குழந்தைக்குப் பால் ஊட்டுகிறாள். குழந்தை பால் விக்கி இறந்துவிடுகிறது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு கோயில் கோயிலாகச் சென்று குழந்தைக்கு உயிர் தருமாறு வேண்டுகிறாள். இடாகினிப் பேய் அந்தக் குழந்தைப் பிணத்தை வாங்கி விழுங்கிவிடுகிறது. மாலதி அழுதாள். சாத்தன் தெய்வம் இறந்த குழந்தை வடிவில் தோன்றிற்று. மாலதி குழந்தையைத் தாயிடம் ஒப்படைத்தாள். குந்தை வளர்ந்தான். தேவந்தி என்பவளை மணந்துகொண்டான். அவன் தேவந்தியிடம் தன் அழகைக் காட்டியபின் தன் கோயிலுக்கு வருமாறு கூறிவிட்டு மறைந்துவிட்டான். தேவந்தி பாசண்ட சாத்தன் கோயிலுக்கு வந்து வழிபட்டாள்.
- தேவந்தி கண்ணகியிடம் வந்தாள்.
![]() |
Created by
AI பாலூட்டல் |
கண்ணகி கனா
- கணவன் கையைப் பற்றிக்கொண்டு புதிய ஊருக்குச் சென்றாள். அங்குக் கணவனுக்குத் தீங்கு நேர்ந்தது. கண்ணகி மன்னனிடம் நீதி வேண்டினாள். பின்னர் வியத்தகு நிகழ்ச்சி நடந்தது.
- கண்ணகியின் கணவைக் கேட்ட தேவந்தி சோமகுண்டம், சூரியகுண்டம் துறையில் நீராடி அவளது குறைபாட்டைத் தீர்த்துக்கொள்ளளுமாறு கூறினான். "அச்செயல் எனக்குப் பெருமை தராது" என்று கூறிவிட்டாள். அப்போது கோவலன் கண்ணகி வீட்டு வாயிலில் வந்து நின்றான்.
கோவலன் கண்ணகி இருவரும் புகார் நகரை விட்டு நீங்கினர்
- கண்ணகி கணவனை உள்ளே அழைத்துச் சென்றாள். படுக்கை மெத்தையில் அமர்ந்துகொண்டு அவளைத் தடவிக் கொடுத்தான். "உன் மேனி வாடிக் கிடக்கிறதே" என்றான். அப்போது கண்ணகி புன்னகையுடன் " இதோ சிலம்பு இருக்கிறது" என்று கூறினாள். "இந்தச் சிலம்பை விற்றுவரும் மூலதனத்தைக் கொண்டு இழந்த பொருளை மீட்டுக்கொள்ளலாம். என்னுடன் புறப்படு" என்றான், கோவலன். இருள் நீங்குவதற்கு முன் இருவரும் புகார் நகரைக் கடந்து சென்றனர்.
கண்ணகி வாழ்க்கை பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் --- தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம்.

No comments:
Post a Comment