Pages

Saturday, 25 April 2026

கவுந்தி அடிகள் துணை

புகார் நகரக் கோட்டை வாயிலைக் கடத்தல்


காட்டாடு, கவரிமான், அன்னம் முதலானவை துணையோடு திரியும் புகார் நகர வாயிலைக் கடந்து, கோவலனும் கண்ணகியும் இருள் நீங்கா வைகறை நேரத்தில் சென்றனர்.

மணிவண்ணன் கோயில், இந்திரன் கோயில்கள் 7, சிலாதலம், உலக இடைக்கழி, இலவந்திகைப் பள்ளி - ஆகியவற்றைத் தொழுதுகொண்டு சென்றனர்.

ஒரு காத தூரம் கடந்து காவுந்தி ஐயை என்னும் சமணத் துறவி வாழும் சோலையை  அடைந்தனர். அப்போது கண்ணகி "மதுரை எங்குள்ளது" என்று கோவலனை வினவினாள். "ஆறு ஐந்து காதந்தான்" என்று கோவலன் நயமாகக் கூறினான். 

காவுந்தி ஐயை துணை


பின்னர் காவந்தி ஐயையைக் கண்டனர். அவர் அடிகளைத் தொண்டு வணங்கினர். - "உயர்குடி ஒழுக்கம் உள்ள நீங்கள் வீட்டை விட்டு ஏன் வந்தீர்கள்" என வினவினார் ஐயை. "மதுரை செல்கிறோம். செல்வம் தொலைந்தது. மதுரை சென்று பொருளீட்ட எண்ணியுள்ளேன்" என்றான், கோவலன். 

"நானும் உடன் வருகிறேன்" என்றார் ஐயை. "கண்ணகிக்கு ஆறுதல் தரும்" என்றான், கோவலன்.

வழிநடை


வெயில் தாக்கம் இல்லாமல் சோலை வழியில் சென்றாலும், வயல் வழியில் சென்றாலும், இன்ன இன்ன துன்பங்கள் நேரும். கவனமாகச் செல்ல வேண்டும் என்று ஐயை இருவருக்கும் அறிவுரை கூறினாள்.  

உழத்தியர் பாட்டு, ஏர்மங்கலப் பாட்டு, முகவைப் பாட்டு முதலான இசைகளைக் கேட்டுக்கொண்டே சென்றனர். 

கரும்பாலை, பற்பல ஊர்கள் ஆகியவற்றைக் கண்டுகொண்டு சென்றர். நாள் ஒன்றுக்கு ஒரு காத தூரம் என்ற அளவில் கடந்து சென்றனர். ஆங்காங்கே தங்கிச் சென்றனர்.  

திருவரங்கத்தில் சாரணர்


திருவரங்கம் வந்தனர். சமணரின் பாறை மேடையில் சாரணர் சொன்ன சமணரின் அறிவுரை கேட்டனர்


கிழட்டு நரிகள்


பரிசிலில் ஏறிக் காவிரியின் தென்கரை வந்தனர். அங்கே உளறுவாயன் ஒருவன் பரத்தையுடன் வந்தான். கோவலன் கண்ணகி இருவரையும் யார் என்று ஐயையை வினவினான். "இவர்கள் என் மக்கள்" என்றார் ஐயை. "உடன் பிறந்தவர் கணவன் மனைவி ஆவார்களா என்றான். அதனைக் கேட்ட கோவலனும் கண்ணகியும் தம் காதுகளைக் பொத்திக்கொண்டு நடுங்கினர். இதனைக் கண்ட ஐயை ஏளனம் செய்த இருவரையும் கிழட்டு நரி ஆகும்படிச் சபித்தார். சாபத்தின்படி நரியாகிய இருவரும் ஊளையிடுவதை கோவலனும் கண்ணகியும் கேட்டு வருந்தினர். சாப விடுதி தரும்படி ஐயையை வேண்டினர். 12 மாதங்ஙகளுக்குப் பின்னர் இவர்கள் தன் உடம்பைப் பெறுவார்கள் என்று ஐயை அருளினார். 

அடுத்து புகார்க் காண்டச் செய்திகளின் தொகுப்பாக, கட்டுரை ஒன்று உள்ளது 

கண்ணகி வாழ்க்கை பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் --- தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம். 

No comments:

Post a Comment