Pages
▼
காமிய மலம் The Impurity of Desire
- அரசன் முறைமையோடு ஆள்வான்
- முறைமைக்கு அடங்காதவரைத் தண்டிப்பான்
- சிவனும் அப்படித்தான் -- 121
- அரசு அன்று கொல்லும்
- தெய்வம் நின்று கொல்லும்
0
- இறைவன் ஆளுமையில்
- முறைமை தவறுவோர்
- நிரயம் எய்துவர் -- 122
0
- நிரையத் துன்பத்தில் பாவம் தீர்ப்பான். -- 123
0
- மருத்துவ நூலின்படி நடந்துகொண்டால் பிணி வராது
- வந்தால் மருத்துவன் மருந்து கொடுத்து நோயைத் தீர்ப்பான்
- சிவன் கன்மத்தால் தீர்ப்பான் -- 124
0
- மருத்துவன் கட்டியை அறுத்து நோய் தீர்ப்பான்
- இறைவன் துன்பம் உண்டாக்கி நீக்குவான் -- 125
0
- பூதவுடல் நீங்கின் புரியட்ட உருவம் பெறுவர்
- இந்தப் புரியட்ட உருவே
- சுவர்க்கத்திலும், நரகத்திலும்
- இன்பமும், துன்பமும் அனுபவிக்கும். -- 126
0
- கன்மத்தின் அளவுக்கு ஏற்ப
- நரகில் துன்புறும்
- யோனியில் (தாய்தந்தையர் உறுப்பில்) பிறக்கும் -- 127
0
- முட்டையை விட்டுவிட்டுக் குஞ்சு வெளியேறுவது போல
- கனவு நீங்கி நனவு வருவது போல்
- உயிர் பிறவியை விட்டு நீங்கும். -- 128
0
- தன்மம் - அதன்மம்
- நன்மை - தீமை
- இன்பம் - துன்பம்
- இவை காமிய மலம் -- 129
0
- இருவினை அநாதி நிலை கொண்டது
- ஆதியின் இயக்கம்
- மலம் சார்ந்தது
- அரன் ஆணையில் அமர்ந்துகொண்டு செல்லும் -- 130
0
No comments:
Post a Comment