Pages

Saturday, 11 April 2026

எல்லாம் அவன் சித்தம் Everything is His will.

  • அரன் தரும் விதியானது அரனின் அருள்
  • நரகம், துறக்கம் ஆகியவை பரகதி
  • அவை பரனின் பாத-பங்கயம் -- 141
0
  • நம் உடல், செயல் எல்லாம் மலம்
  • அரன் இவற்றை மாயையால் கழுவுவான் -- 142
0
  • நித்தம், அரு, ஏகம் நிலையினன்
  • உலகின் வித்து, அசித்து நிலையினன்
  • எங்கும் வியாபித்திருக்கும் விமலன். 
  • சத்தியாய்ப் போகம் தருபவன். -- 143
0
  • முக்கால மாயையில் 
  • ஆக்கி, அளித்து, போக்குகிறான் -- 144
0
  • நியதி, கன்மம் ஆகியவற்றில் அறிவை உண்டாக்குவான். -- 145
0
  • அவன் வித்தை-அலைகள் நம் வினைநீரில் தோன்றும். 
  • நம் ஆன்மாவைப் புருடன் ஆக்குவான். -- 146
0
  • முக்குண வடிவன் -- 147
0
  • எல்லாம் அவன் சித்தம்
  • நம் புத்தி புண்ணியம், பாவம் செய்யும் 
  • சுக துக்கம் அனுபவிக்கும்
  • மோகப் பித்தாய் செயலாற்றும் -- 148
0
  • ஆங்காரம் நம் புத்தியில் தோன்றும் 
  • அது அகந்தைக்கு வித்தாகும்
  • யான், எனது - என்னும் 
    • பூதாதி (ஐம்பூத விதை)
    • வைகாரிகம் (முக்குணங்களுக்கு அடிப்படையான ‘தான்’ என்னும் உணர்வு)
    • தைசதம் (நான் என்னும் உணர்வு)
  • என நிற்கும். -- 149
0
  • மனம் நான் என்னும் உணர்வாகிய தைசதத்தில் நினைக்கும். 
  • புலனுணர்வில் செயல்படும். -- 150
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பிரமாணவியல்,  இரண்டாஞ் சூத்திரம் பாடல் 150 முடிய   

No comments:

Post a Comment