Pages

Wednesday, 8 April 2026

இல்லது என்பது உள்ளது மறைதல்

பிரமாணவியல்    (மெய்யறிவுக்கான அடிப்படை)
முதற் சூத்திரம்   


  • ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்னும்படி உரைந்திடும்
  • உலகும், உலகிலுள்ளவையும் வந்து போகின்றன
  • எனவே அவற்றைத் தருபவன் ஒருவன் இருக்க வேண்டும்
  • அவன் முதலும் ஈறும் இல்லாத அனாதி
  • சித்து உரு. (வித்தை உருவம் கொண்டவன்) -- 21

0

  • தோன்றுகின்றன
  • மறைகின்றன
  • விதிப்படி நிகழ்கின்றன 
  • தோற்றி மறைக்கிறான் -- 22

0

  • ஐம்பூதம் அவனுக்குக் கருவி 
  • உயிரில்லா அவற்றிற்கு ஆற்றல் என்னும் உயிரை உண்டாக்குகிறான் -- 23

0

  • நிலம், புனல், அனல், கால் ஆகியவை தோன்றி, நின்று, மறைதல் அவற்றின் ஆற்றல்
  • உயில்லாப் பொருள்களில் உஉயிரானது தோன்றி,  நின்று, மறைகின்றன. -- 24

0

  • இந்த ஆற்றல் உயிர் உள்ளதும், இல்லாததும் ஆகும் -- 25

0

  • இல்லதே இல்லை. எல்லாம் உண்டு. உள்ளது தானே தோன்றும். உள்ளதில் இறைவன் இருக்கிறான். மறைந்து இல்லை ஆகிறான். -- 26

0

  • கருத்தனால் எல்லாம் உண்டாகின்றன -- 27

0

  • உடம்பு அழிவதையும் தோன்றுவதையும் பார்க்கிறோம்.
  • உலகம், பூநீர், தீ, வளி, வானம் ஆகியவை ஒன்றில் ஒன்று தோன்றி மறைவதால் இந்தத் தோற்றம் உண்டாகிறது. -- 28

0

  • ஓர் இடம் அழிந்தால் மற்றோர் இடம் நிற்கும்; பாரில் உள்ள இடம் அழியாது - என்றால்,
  • அப்படி இல்லை
  • காலத்தால் மேகம் தோன்றி, மாறி, மறைவது போல் நிகழும். -- 29

0

  • காலமே கடவுள் எனக் கண்டனம் - எனில்
  • காலத்துக்கு அறிவு இல்லை. 
  • காலமும் கடவுளுக்கு உதவும் துணைக்கருவி -- 30

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பிரமாணவியல், முதற் சூத்திரம் பாடல் 30 முடிய   

No comments:

Post a Comment