Pages

Wednesday, 8 April 2026

முக்கோண முனை

  • துணிந்து முக்கோணத்தின் முனை போலத் தோன்றுவது துணிபொருள். 
  • அது உண்மை, இன்மை என்னும் இருநிலைகளைக் கொண்டது. -- 15

0

  • இயல்பு, காரியம், அநுபலம் (அனுபவம்) என்று ஏது (காரணம்) மூன்று. 
  • மாமரத்தைக் காட்டல் - உரு (இயல்பு) காரியம்.
  • அனலை காட்டல் அனுபலன் காரியம்.
  • சீதம் இன்மை, பனி இன்மை காட்டல் ஏது காரியம். -- 16

0

  • அந்நுவயம் (அனுவயம்) என்பது தொடர்புபடுத்திப் பொருள் கொள்ளுதல். 
  • புகை தெரிகிறது; ஆகவே அனல் உண்டு - என்று கொள்ளல் அனுவயம். 
  • மலர் தெருகிறது. இதன் அரும்பு இல்லாமல் போயிற்று - எனல் - உண்மையும் இன்மையும். -- 17

0

  • மணம் தெரிகிறது; பூ இருக்கும். - இது அனுமானம்
  • சொல்லும் முறைமையால் கற்றவன் எனல் அனுமானம்
  • ஒருவன் நடத்தையால் அவன் அடையப்போகும் அவனது கன்ம பலனை உணர்தல் அனுமானம்  -- 18

0

  • அநாதியும், அமலனுமாகிய அறிவன் தந்த நூல் ஆகமம். 
  • ஆதி மாறிப் பேணல் தந்திரம்
  • தன்மானத்தை விட்டுத் தெய்வத்தை வழிபடல் வாய்மை -- 19

0

  • பக்க போலி 4
  • ஏது போலி 3
  • உவமைப்போலி எழுமூன்று
  • தானம் 22
  • அளவை 60 -- 20

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பாடல் 20 முடிய 


No comments:

Post a Comment