அளவை
- காண்டல்
- கருதல்
- உரை
- அபாவம் (இல்லாமை)
- பொருள்
- ஒப்பு
என ஆறு வகை.
மேலும்
- ஒழிபு
- உண்மை
- ஐதிகம் (முன்னோர் வழி நம்பிக்கை)
- இயல்பு
என நான்கு வகை.
இவை
- காண்டல்
- கருதல்
- உரை
என்னும் மூன்றில் அடங்கும். -- 7
காட்சி என்பது ஐயமின்றித் தெளிவுபடுத்திக்கொள்ளல்
அனுமானம் (தெரிந்ததைக் கொண்டு தெரியாததை ஊகித்தல்) -- 8
ஐயம் (இதுவா அதுவா என்று மனம் குழம்புதல்) -- 9
- தன் அனுமானம்
- பிறர் அனுமானம்
- இருபாலாருக்கும் ஒத்த அனுமானம்
என அனுமானம் மூன்று வகை. -- 10
- பொது
- இயற்கை
என அனுமானம் இரண்டு வகை. -- 11
அனுமானமானது
- உயிருணர்வு
- ஒளி
- ஞானம்
ஆகியவற்றில் தோன்றும். -- 12
இன்ப, துன்பம் அறிவின் அலைகள். -- 13
தனக்காகவும், பிறருக்காகவும் அனுமானம் தோன்றும்.. -- 14
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம் - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பாடல் 14 முடிய
No comments:
Post a Comment