காப்பு
ஒருகோட்டன்
இருசெவியன்
மும்மதத்தன்
நால்வாய் ஐங்கரத்தன்
ஆறுதல் தரும் கோட்டத்தில் பிறையும் இதழியும் தாழ்சடையில் சூடிக்கொண்டிருப்பவன் தரும் ஒரு வாரணம்.
அவன் தாள்கள் அன்பொடும் வணங்கி
ஒவாதே இரவுபகல் உணர்வோர் அயன் மால் அருளைப் பெறுவர். -- 1
பாயிரம்
ஆறு வகைச் சமயத்தவர்க்கும் அவரவர் எண்ணப்படி வெவ்வேறு பார்வையில் இறைவன் தோன்றுவான். அவன் வேத ஆகமலங்கள் காட்டும் கருத்தைக் கடந்தவன். அறிவில் அவரவர் தாய்தந்தையராக அருள் தருபவன். அவனை நினைக்கின்றேன். -- 2
என் பிறவியைக் கடக்கும் மருந்தாக, திருவெண்ணெய் நல்லூரில் வாழும் மெய்கண்டான் இயற்றிய சிவஞான போதம் நூலை நினைக்கிறேன். -- 3
வீடு பெற விரும்பும் தொண்டர்களை வணங்கி, சில சொல்கிறேன். -- 4
மறை, அயன், மால், மனம், வாக்கு - எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் இறைவனைப் பற்றிச் சொல்ல விரும்பும் என் ஆசை நிறைகுணம் கொண்டவர்க்கு நகைப்பை விளைவிக்கும். -- 5
அறிவின் ஆக்கமே மறை என்னும் வேதம். இதனைக் படித்தால் சிவஞானம் பெறலாம். மனமயக்கம் நீங்கும். பிறவி-இருள் நீங்கும். -- 6
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம் - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- காப்பு
No comments:
Post a Comment