திருமால் நாராயணனை முழுமுதல் கடவுள் எனக் கொண்டு வழிபடும் கோட்பாடு பாஞ்சராத்திரி எனப்படும்.
பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்ச என்னும் ஐந்து விதமான வடிவங்களில் நாராயணன் அருள் புரிவதாகக் கொள்ளப்படுவதால் இது பாஞ்சராத்திரி என வழங்கப்படுகிறது.
- பரம் - உயர்நிலை
- வியூகம் - உத்தி
- விபவம் - அவதாரம் என்னும் தோற்றம்
- அந்தர்யாமி - அனைத்திலும் உள்ளிருத்தல்
- அர்ச்சம் - கோயிலில் சிலை
ஆகியவை பஞ்சராத்திரி நிலைகள்
பாஞ்சராத்திரி மதம்
நாராயணனின் ஐந்திறக் கோட்பாடு
- ஆதி அருவம்
- அகண்ட பூரணம்
- ஞான சோதி
- மாயன்
- கருநிறத்தில் பாற்கடலில் பாம்பணையில் துயிலல்
இவை பாஞ்சாத்திரி இருப்புநிலைகள். -- 264
உந்தியில் அயனை ஈன்று உலகைப் படைக்கச் செய்தான்.
உலகை அழிக்க அரனைத் தந்தான்.
இப்படிச் செயல்-தலைவனாக மாயன் விளங்குகிறான். -- 265
- மீன்
- ஆமை
- பன்றி
- நரசிங்கம்
- வாமனன்
- சீத்தாராமன்
- பரசுராமன்
- பலராமன்
- கண்ணன்
- கல்கி
தோற்றம் கொண்டு மாயம் செய்தான். -- 266
- மீனாய் கடலைக் கலக்கினான்
- பாற்கடலைக் கடையும்போது ஆமை உருவில் மலையைத் தாங்கினான்.
- பன்றி உருவில் பாதாள உலகம் வரை அகழ்ந்தான்
- இரணியன் உடலைப் பிளந்தான்.
- வாமனனாக உலகை அளந்தான்.
- பரசுராமன் தன் கோடாரியால் மன்னர்களைக் கொன்றான்
- பலராமன் கலப்பையால் நிலத்தை உழுது உலகைப் பேணினான்.
- கண்ணனாக கம்சனைக் கொன்றான்; பாரதப்போரை உண்டாக்கி முடித்தான்
- சீத்தாராமனாக இராவணனைக் கொன்றான்
- குதிரையாக வரப்போகிறான்.
இவை நாராயணன் மாயங்கள். -- 267
பொய்கையில் முதலை வாயில் அகப்பட்ட யானையைக் காத்தான். கொன்ற முதலைக்கு வீடுபேறு அளித்தான். -- 268
கடலைக் கடையச் செய்து பொங்கி வந்த அமுதத்தைத் தேவர்களுக்கு ஊட்டினான். கொலை செய்யும் அசுரர்களைக் கொன்றான். -- 269
மாயை காட்டி நப்பின்னையை மணந்தான். -- 270
நாராயணனின் ஐந்திறக் கோட்பாடு
பாஞ்சராத்திரி மதத்துக்கு
மாறுபட்ட கருத்துகள்
ஆதி என்றால் அந்தம் இருக்குமல்லவா?
இறைவனைக் குறையற்றவன் என்றல்லவா மறை கூறுகிறது.
ஞானசோதி மாயம் செய்யுமா?
பிறவியில் தீதின்மை சாத்தியமா? -- 271
இலங்கைப் போரில் மயக்கமுற்று வீழ்ந்தானே -- 272
வேள்வியில் தக்கன் கொடுக்கும் பலியுணவை வாங்கித் தின்னச் சென்றானே -- 273
மறைநீதி உலகின் இயற்கை.
இந்த வேதநூலை மாயன் சொன்னான் என்கிறாய்.
கல்லால மரத்தடியில் சிவன் மறைநீதி சொன்னான் என்கிறார்களே. -- 274
பிரமனைப் பெற்றான் என்கிறாய்.
சிவன் மகன் அந்தப் பிரனின் ஒரு தலையைக் கிள்ளினானே. -- 275
தாய் வயிற்றில் பிள்ளைகள் பிறப்பது போலப் பிறந்தானே. -- 276
நாரணன் சிவனைத் தாக்க யானை ஒன்றை அனுப்பியபோது, சிவன் அந்த யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக்கொண்டானே. -- 277
நாரணன் அழிப்புத் தொழில் செய்யச் சிவனை ஏவினான் என்றாய்.
அழிப்பவன் ஆக்கமாட்டானா -- 278
சிவனிடம் பெற்ற வரத்தால், சலந்தரன் நாரணனை வென்றான். சலந்தரனைச் சிவன் கொன்றான். -- 279
மீன் உருவம் கொண்டு வாரி நீர் அனைத்தும் உண்டான்.
உலகை அழிப்பேன் என்று ஆலங்கட்டி மழை பொழிந்த இந்திரனை மலையைக் குடையாகப் பிடித்து உலகைக் காத்தான். -- 280
பாற்கடலைக் கடைய ஆமை மத்தாய் இருந்து மேருமலையைத் தாங்கினான். -- 281
பன்றி உருவில் தன் பல்கொம்பால் உலகமெல்லாம் உழுதான். -- 282
இரணியன் தூணைப் பிளந்தான். -- 283
மூன்றடி மண் தானம் பெற்று மூவுலகை அளந்து மாபலியை ஈனமாக்கினான். -- 284
மாய மானைக் கொன்றான் --- 285
கோடாரியால் அரசர் தலைகளை வெட்டினான். -- 286
வாசுதேவருக்கு மகனாகப் பிறந்தான். -- 287
பரி உருவில் (கல்கி) வருவேன் என்றான். -- 288
ஆதிமூலம் யானைக்கு உதவினான். -- 289
வணங்குவோருக்கு இன்று நீ எம்பெருமான். -- 290
உலகை உண்டான். -- 291
நஞ்சுண்ட நாயகன் தன் மகன் குமரனால் அரியை அஞ்சி ஓடும்படிச் செய்தான். -- 292
கீதை நூல் சொன்னான். -- 293
மாயை செய்த மாயன் பதிபசுபாசம் ஆகமாட்டான். -- 294
பாசத்தை விட்டுப் பசுக்கள் பதியை அடைவதை இவன் மாயை மயக்குகிறது. -- 295
அழல் உருவாய் நின்ற அரனை அரியால் காணமுடியவில்லை. -- 296
ததீசி முனிவரின் முதுகெலும்பை படையாக ஆக்கிக் கொண்டு அசுரரை வெல்ல நாரணன் தேவர்களுக்குத் தந்திரம் சொல்லிக் கொடுத்தான். -- 297
துர்வாச முனிவர் திருமால் மார்பை மிதித்தார். -- 298
மும்மூர்த்திகளில் சிறந்தவர் திருமாலே என்று பிருகு முனிவரால் தன்னை உணர்த்திக்கொண்டார். -- 299
பிருகு முனிவரால் நாரணன் பெற்ற சாபத்தைச் சிவன் போக்கினார். -- 300
பிருகு முனிவர் சாபத்தால் நாரணன் பிறந்திறந்து வாழ்கிறான். -- 301
சிவஞானசித்தியார் பரபக்கம் முற்றிற்று
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம் - சிவஞான சித்தியார் மூலம் பாடல் 301 முடிய.
No comments:
Post a Comment