கபிலர் என்பவரால் கடவுளை மறுக்கும் நூல் ஒன்று செய்யப்பட்டது.
பிரகிருதி என்பது இயற்கை
ஆன்மா என்பது உயிர்
இரண்டும் சேர்ந்து உலகம் உண்டாயிற்று
இது கபிலரின் சாங்கிய நூல் கோட்பாடு.
இந்த நூலை நிரீச்சுரசாங்கியம் என்பர்.
நிரீச்சுரசாங்கியன் தன் மதக் கோட்பாட்டைச் சொல்கிறான்.
- மூலம்
- புரியட்டகம்
- விகிர்தி (மாற்றம்)
என மூன்று ஆகும்.
அது
- பிரகிருதி (மூலப்பொருள்),
- தூலம் (பருவுடல் அமைப்பு),
- சூக்குமம் (பருவுடலின் கண்ணுக்குத் தெரியாத கூறுகள்)
என மூன்றாகவும் பார்க்கப்படும்.
சுத்த புருடன் பரம் எனப்படுவான்.
பரம் உடல் என்னும் கோயிலில் சேட்டை செய்வான்.
இதனால் உலகம் யோனி பலவாய் பரந்து ஒடுங்கும். -- 260
நிரீச்சுரசாங்கியன் மதத்துக்கு மாறுபட்ட கோட்பாடு
பிரகிருதி என்னும் மூலத்துக்குச் சுத்தன், அறிவன், புருடன் என்னும் தன்மைகள் இல்லை. மூலம் பெருக்கும்; சிறுக்கும். முத்தன் ஆகும் தன்மை மூலத்துக்கு இல்லை. -- 261
பிரகிருதி என்னும் மூலமானது புருடன் என்னும் ஆளுமை பெற்றால், குருடன் முதுகில் முடவன் ஏறினாற்போல இயங்கும். -- 262
விவேகம் என்னும் பகுத்தறிவுதான் முத்தி எனில், பந்தம் நீங்காது. எனவே உடல்மீதுள்ள பாசத்தை நீக்கி, நின்மலனாய் வீடு பெறவேண்டும். -- 263
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம் - சிவஞான சித்தியார் மூலம் பாடல் 263 முடிய.
No comments:
Post a Comment