Pages

Thursday, 9 April 2026

இறைவன் மாய வடிவினன்

  • கற்ற நூல் சொல்லும் பொருள் 
  • கருத்தினில் தோன்றும் பெற்றிமை
  • சாக்கிரம் என்னும் விழிப்பு நிலையில் தோன்றும் உயிரின் உணர்வுகள்
  • அனைத்தும் உலகில் தோன்றி ஒடுங்குமாறு பரமன் நிற்கிறான். -- 51
0
  • உயிரானது அரன்பால் தோன்றி அரன்பால் ஒடுங்கும்
  • இது மலத்தின் சிதைவு 
  • சித்தத்தின் அயர்வு
  • காரண காரியங்களும் அவ்வாறே அரன்பால் தோன்றி ஒடுங்கும் -- 52
0
  • தோற்றுவித்து, அளித்து, துடைக்கும் மூன்று தொழிலையும் ஈசன் செய்கிறான். 
  • இது தாமரை கதிரவனைக் கண்டு மலர்வது போன்றது
  • கானல் நீர் தோன்றவது போன்றது. -- 53
0
  • திருமாலும், அயனும் சிவனிடம் அதிகாரம் பெற்ற ஆற்றலர். -- 54
0
  • சிவனுக்கு இறுதி காலம் இல்லை -- 55
0
  • எல்லாம் சிவன் விளையாட்டு
  • உயிரின் புத்தி
  • மலம் நீக்கி முத்தி அருளும் விளையாட்டு -- 56
0
  • உயிரின் கன்ம வினைப்படி  அழிப்பு, இளைப்பாறல், ஆக்கம் மூன்றையும் ஈசன் அருள்கிறான். -- 57
0
  • அருவம்
  • உருவம்
  • அருவுருவம்
  • மூன்றும் ஈசனுக்கு உண்டு -- 58
0
  • நாம் உருவம் பெற்றுள்ளோம்
  • யோகசித்தர் உருவரு நிலையினர் -- 59
0
  • சிவன் யோகசித்தர் போன்றவனா
  • இல்லை
  • மாய வடிவினன். -- 60

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பிரமாணவியல், முதற் சூத்திரம் பாடல் 60 முடிய   

No comments:

Post a Comment