பிரபாகரன் மதம்
சைமினி தோற்றுவித்த மீமாம்ச மத்ததைப் புரிந்துகொண்ட பிரபாகரன் பட்டாசான் சற்றே வேறுபட்ட கோட்பாட்டைக் காட்டுகிறான். அது இங்குக் கூறப்படுகிறது. -204பொருளின் தோற்றத்தில் அபாவம், அபூர்வம் என்று இரண்டு நிலைகள் உண்டு. முத்தி என்பது ஈரமண்ணால் செய்து சுடப்படாத சிலை போன்றது. - 205
- அபாவம் - பகலில் தெரியும் சூரியன் இரவில் தெரியாதது போன்றது இது.
- அபூர்வம் - வானவில் அபூர்வமாகத் தோன்றும். (எப்போதாவது)
- இறைவன் தோற்றம் இந்த இரண்டு நிலைகளைப் போன்றது.
பிரபாகரன் மதக் கோட்பாட்டை
சிவஞான சித்தன் மறுத்துக் கூறுகிறான்.
செயல்பாடுகள் ஒருவனுக்கு வலிமையைத் தரும் என்று வேதங்கள் கூறுகின்றன. எனவே வீடு என்பது ஆகாயத் தாமரை. -206சிவப்பு இல்லாமல் தீ எரியுமா? எல்லாம் விதி எனல் அறிவில்லா உரை. உடலில் உணர்வு இல்லாதவர்தான் எல்லாமே ஊழ் என்று கூறுவர். -207
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம் - சிவஞான சித்தியார் மூலம் பாடல் 207 முடிய.
No comments:
Post a Comment