ஆதியின் புறத்தது ஊழ் என்பதை, திருக்குறளும் சுட்டுகிறது. ஆதிபகன் என்று இறைவனைச் சுட்டிக்கொண்டு திருக்குறள் தொடங்குகிறது. அறநெறியை ஊழ்வலிமையைக் காட்டி முடிக்கிறது.
பட்டாசாரியன் என்பவன் வைணவ ஆசிரியன். திருமால் தொண்டன். திருமால் கோயில் பூசாரி.
மீமாம்சம் கோட்பாட்டின் ஒரு பிரிவு பட்டாசிரியன் மதம். பூருவமீமாஞ்சையின் ஆசிரியர் சைமினி. இக் கோட்பாட்டினர் மற்றும் இருவர் உள்ளனர். அவர்கள் அக்கபாதன் கணாதன் ஆகியோர். (மணி. 27, 82).
பட்டாசாரியன் தன் கோட்பாடு பற்றிக் கூறுவதும் சிவஞான சித்தன் அதனை மறுப்பதும் பற்றிய செய்திகள் இங்கு உள்ளன.
0
பட்டாசாரியன்
தன் மதம் பற்றிக் கூறுகிறான்.
பட்டாசாரியன் வேதம் ஓதுவான். வானுலகம் பெற நல்ல செயல்களைச் செய்யவேண்டும் என்பது இக்கோட்பாட்டடாளன் கருத்து. -181
பேசத் தெரியாதவன் மூங்கை. காமம் முதலான அறுகுணங்களைச் சீரமைக்கத் தெரியாதவன் வானுலகம் செல்ல முடியாது. -182
கற்ற அளவு ஞானம் இருக்கும். அந்த ஞானம் அடுத்த பிறவியிலும் தொடரும். -183
தேவர், முனிவர், சித்தர், நரர் எல்லாரும் வேதம் சொல்வர். அது தோண்டிய கிணற்றில் ஊறும் நீர் போன்றது. -184
வேதத்தின் அங்கம் 6, உபவேதம் 3 ஆகியவை வேதத்தில் அடங்கும். -185
மூன்று கால நிலைகளை உணர்ந்தால்தான் வேதம் புரியும். -186
தாது என்பது வேர்ச்சொல். பிரத்தியம் என்பது அதனுடன் சேரும் அடைமொழி. இப்படித்தான் வீடும், பாசமும் மருவியுள்ளது. -187
நிகழ் காலமானது இறந்த காலமாக இறந்துவிடும். வரும் காலமாக மாறும். -188
அறிவு ஆதியின் புறத்தது. அருவம். வினை. விதி. ஊழ். -189
இது வயலில் பயிர் பலன் தருவது போன்றது. -190
தெய்வங்களுக்குச் சோம பானம் படைப்பது சோமயாகம். இந்த வேள்வியால் வேண்டியதைப் பெறலாம். -191
அறிவால் செயலாற்ற வேண்டும். இது நம்மைப் பதியிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும். -192
மந்திரம் சொல்லிப் பசுவைப் பலியிட்டு வேள்வி செய்தால் வீட்டின்பம் பெறலாம். -193
இவ்வாறு கூறிய பட்டாசாரியனை
சிவஞான சித்தி பெற்றவன்
மறுத்துக் கூறுகிறான்.
வேதம் சுயம்புவா? உங்கள் ஆதி பாடமாக்க ஓதியதா? -194
வானில் ஒலி உள்ளது என்று கபிலன் சொன்னான். -195
உருவில் மறைபொருளும் உள்ளது என்பது தேரையார் கூற்று. -196
ஒருவன் ஓரிடத்தில் நிற்கும்போதுதான் திசை உண்டாகிறது. அப்படித்தான் குணமும் மற்றதனோடு ஒப்பிடும்போதுதான் உண்டாகும். -197
அரசன் ஓலை திருமுகம் எனப்படும். அதுபோல, கடமையைச் செய்வது உலக நெறி. -198
என் உரை வேத மொழியில் உள்ளது. -199
அணுவே ஆதி எனில் அது காலத்தில் அழியும் அல்லவா? -200
உயிர் உடலில் இருக்கும் மணம் என்றால் அது மற்றொரு உடலுக்கு செல்வது எப்படி? -201
செய்யும் வினை அழிகிறது. அதன் பயன் உயிரில் கலக்கும். -202
கருமங்கள் அறிந்து செய்யப்படுவதால் அறிவாகிய உயிருடன் வினையானது தொடரும். -203
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம் - சிவஞான சித்தியார் மூலம் சிவஞான சித்தியார் பாடல் 203 முடிய.
No comments:
Post a Comment