Pages

Friday, 3 April 2026

சிவஞான சித்தியார் - ஊழ்வினை நம்பிக்கை

ஆசீவகம் என்பது சமண மதத்தில் ஒரு பிரிவு. இது ஊழ்வினைத் தாக்கத்தை மையமாகக் கொண்டது.    


ஆசீவகன் மதம்   

ஆசீவகன் தன் தலைமயிரைத் தானே பிடுங்கிக்கொள்வான். -165    

நிலம்,  நீர், தீ, காற்று, உயிர் - ஆகியவை ஐவகை அணுக்கள். -166    

நிலமும் நீரும் தாழும். தீயும் காற்றும் உயரும். இது பொருளின் தன்மை. -167    

இவை நான்கும் ஒன்று கெட்டு மற்றொன்றாக மாறுவது இல்லை. -168    


இவை விரியும், நீளும், குறுகும், குவியும், ஊன்றும். ஊடே பாயும். -169    

இவை நான்கும் கன்மத்தால் தோன்றியவை. மனிதனும் தேவரும் இதனை அறிவர். -170    

நிலம் > நீர் > தீ > காற்று - இது வரிசைமுறை. -171   

வெண்மை, பொன்மை, செம்மை, நீலம், கழிவெண்மை, பச்சை - என்பன 6 வண்ணம். பிற இவற்றின் கலவை. -172    


பேரிழவு, இடையூறு, இன்பம், வேறுபடல், நாடுதல், செல்லல், மூப்பு, சாவு - ஆகிய எட்டும் ஊழில் விளையும். -173   

செய்த புண்ணியம், பாவம் ஆகியவற்றின் விளைவே ஊழ். -174    


ஆசீவகன் மதத்தை சிவஞான சித்தன் மறுத்தல்    


வீடு என்பது வாராநெறி. அதனைப் பெற்றபின் ஊழ் என்ன செய்யும்?  -175    

மண்டலர், செம்போதகர் என்று சமணத்தில் இருபால் ஆசிரியர்கள் உண்டு. -176  

உயிர் உடலில் கலந்திருப்பது ஒட்டுக் கலப்பு.   -177   


அணுக்கள் கீழும் மேலும் செல்பவை என்றால், அவை நமக்குள் ஒட்டுவது எப்படி? -178    

ஒட்டும் அணுக்கள் வேறு என்றால் அது நகைப்புக்கிடம். -179    

கூடா அணுவைக் கூட்டி வைக்கும் ஒருவன் உண்டு அன்றோ? -180 


அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம்  - சிவஞான சித்தியார் மூலம் சிவஞான சித்தியார் 165 - 180

No comments:

Post a Comment