Pages

Friday, 3 April 2026

சிவஞான சித்தியார் - அருகனின் பற்றின்மைக் கோட்பாடு

நூல்கண்டு போன்று தன்னைத் தன் சுற்றத்தாரோடு சுற்றிக்கொண்டு வாழ்வது நூல்கண்டுநெறி --- கண்டநெறி --- கண்டக் கோட்பாடு. 

சுற்றப் பற்று இல்லாமல் வாழ்வது நிகண்டம். 

இப்படி வாழும் கோட்பாட்டை விளக்குவது நிகண்ட வாதம். 

இது சமண மதக் கோட்பாடு.   

🍎

நிகண்டவாதி மதம்   

🍎

மணக்கும் அசோகு நிழலில் இருந்துகொண்டு மறை புகன்றவன். நீதிநெறிகளைக் கடைப்பிடித்துக்கொண்டு வாழ்பவன். இல்லற வாழ்வின் ஆசை அகன்றவன். பாசம் இல்லாத் துறவறம் மேற்கொண்டவன். பிறர் இல்லங்களில் உணவு வாங்கி உண்பவன். படுக்கும் பாய், துடைக்கும் மயில்வீலி ஆகியவற்றை வைத்துக்கொண்டிருப்பவன். இவன் நிகண்டவாதி.  -143    

அருகன் எண்குணம் கொண்டவன். அவனை வானவர் வணங்குவர். அவன் எங்களுக்கு இறைவன்.  -144    

அருகன் கருவி ஏதும் இல்லாதவன். முக்காலமும் உணர்ந்தவன். குற்றமில்லாதவன். -145   

🍎

பசி, தாகம், மோகம் இல்லாதவன். உறக்கத்தைக் கைவிட்டவன். மாறுபட்டவனுக்கும் அருள்பவன்.  -146    

பத்து நெறிகளைக் கடைப்பிடிப்பவன். -147 

கற்ற நெறியில் நிற்பவன்.  -148    

ஐம்புல ஆசைகளை விட்டவன்.  -149   

🍎 

பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்னும் அறுவகைச் செயல் கட்டுப்பாட்டிலிருந்து விலகியவன். -150    

🍎

நிகண்டவாதி மதக் கோட்பாடுகளை, சிவஞானத்தில் சித்தி பெற்றவன் மறுத்துக் கூறுகிறான். 

🍎

அருகன் அறத்தில் மன்னியவன் என்றால், அனந்த ஞானம் அவனுக்கு எப்படி வரும்?  -151    

அவன் மற்றவர்களை அறநெறியில் குளிக்கச் செய்பவன் என்றால், அது ஒரு அவத்தை (மெய்ப்பாடு) அல்லவா?  -152    

அருகன் செயலாற்றாக் கருவி என்றால், அவன் அநாதி ஆவது எப்படி? -153    

உயிர் உடம்பை விரும்பும். மன்னன் மக்களைக் காப்பது போல் அருகள் அனைத்துயினங்களையும் விரும்பிதானே காக்கிறான்.  -154    

🍎

ஊமன் ஊமனுக்குச் சொல்வது போல் பேசுகிறாய். -155    

இன்ப நிலையில் இருப்பவனுக்கு, மற்றவர்களின் துன்பநிலை தெரியுமா? -156    

நீர் நிறைந்த குடம் போன்றவன் அருகன் என்றால், நீர் குறையும்போது அவன் நிலை என்ன? -157    

தன்மாத்திகாயம், தன்மம் என்னும் இரண்டு நிலை  பற்றிக் கண்டநூல் கூறுகிறது. இவை பூவும் வண்டும் போன்றவை.  -158    

🍎

பாவ புண்ணியங்களால்  நிரையமும் வீடும் பெறுதலானது வில்லும் அம்பும் போன்றவை. ஒன்று இல்லாமல் மற்றறொன்றால் செயல் இல்லை. -159    

உடம்பு அணுவின் இயக்கம் - என்பது நிகண்டவாதி கோட்பாடு. -160    

அறுகுணச் செயல் ஊழின் தாக்கம் -161    

மூச்சைப் பக்குவப் படுத்தி அறுகுணங்களைச் சீரமைக்கலாம். -162   

🍎 

நீர் வறண்டு போனால் பூனை மீன் தின்னும். அதுபோல, கன்மம் நிச்சயமற்றது. -163    

குடத்தில் நீர் கொண்டு வருவது போல, சிவன் என்னும் குடத்தில், அவன் அருள் என்னும் நீரைக் கொண்டுவரலாம். -164 

🍎

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம்  - சிவஞான சித்தியார் மூலம் சிவஞான சித்தியார் 164

No comments:

Post a Comment