Pages

Saturday, 4 April 2026

சிவஞான சித்தியார் - பேச்சொலி - கோட்பாடு

ஒலி வடிவிலிருந்து உலகம் தோன்றியது எனக் கூறுவது சத்தப் பிரமவாதி மதம். 

உலகைத் தோற்றுவித்த பிரமத்தின் வாக்குகள் நான்கு வகை. அவை சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்பன. இவற்றில் 
  1. குக்குமை என்பது ஓர் உயிரின் மூலாதாரத்தில் தோன்றும் ஒலி. இது தனக்கும் மற்றவர்களுக்கும் தெரியாது. 
  2. பைசந்தி என்பது உள்மனத்தின் இரண்டாம் நிலை. இந்த ஒலியியக்கம் தொப்புளுக்குள் தோன்றி இதயத்தை அடையும். நாடித் துடிப்பாகத் தெரியும்.
  3. மத்திமை என்பது ஒலியின் மூன்றாம் நிலை. இது உதானம் உந்தும் மூச்சுக் காற்று வாய் ஒலியாக வெளிப்படும். இது மனத்தின் ஒலி.  
  4. வைகரி என்பது பேச்சொலி. ஒருவர் பேச்சு அடுத்தர் காதுகளைச் சென்றடையும் நிலை. 

சத்தப் பிரமவாதி தன் மதக் கோட்பாட்டைச் சொல்கிறான். 
உரைவாதம் இவன் கோட்பாடு.

பேச்சால் உலகின் வாழ்வியல் இயங்குகிறது. மேலோர் பேச்சே உலகம். (உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே). இதில் பொய்மை மணம் கலக்காமல் இருப்பது ‘வீடு’. -208    

சத்தமே பொருளை உணர்த்தும். (குழந்தைக்குப் பசி என்பதை அதன் அழுகை உணர்த்தும்). பொதுவாக உயிரின் ஒலி பரிமாணம், விவர்த்தம், மாயம் என்னும் மூன்று நிலைகளில் இருக்கும். -209
  1. பரிமாணம் என்பது உயிரின் மரபணுக்கள் வளரும் நிலை.
  2. விவர்த்தம் (வியர்த்தம்) என்பது முயற்சி பயனில்லாமல் போதல். 
  3. மாயம் என்பது மாயமாய் மறைந்து போதல். 
பூப்பொடியில் இருக்கும் மணம் போன்றது சொல்லில் இருக்கும் பொருள். இது நெல்லின் கரு போன்றது. -210

பேசும் சொல்லில் பொருள் இருக்கிறது. -211

பேச்சொலிக் கோட்பாட்டாளன் கூறிய இந்த உரைகளை 
சிவஞான சித்தன் மறுத்துப் பேசுதல்

மையலால் உரை. உரையால் உலகம் - என்கிறாய். இது மறைநெறிகளிலிருந்து மாறுபட்டது.. -212

பரிணாம வளர்ச்சி (பரபணுவின் அறிவு வளர்ச்சி) பேச்சு என்னும் அருவுருவால் எவ்வாறு நிகழும்? -213

ஆயம், அவிவர்த்தம், மாயம் என்று மூன்று நிலைகளில் இருக்கும் பேச்சொலியின் கருத்துக்குப் பெயர் என்ன? -214 
  1. ஆயம் - ஆயத்தார் புரிந்துகொள்ளும் பேச்சு
  2. அவிவர்த்தம் - பயன் தராத பேச்சு
  3. மாயம் - பசப்புப் பேச்சு

உரையின் பொருள் உரைக்குள் இருக்கிறது என்றால், அதன் வளர்ச்சியை எப்படிக் காண்பது? 215

தீயில் வறுக்கும்போது நெல் பொரி ஆகிறது. சொல்லில் பொருள் வளர்ச்சி எதனால் தோன்றுகிறது? 216

ஒரு சொல்லுக்கு முன் கண்ட பொருள் ஒன்றாய் இருக்கும்போது பின்னர் காணும் பொருள் அதன் பரிணாம வளர்ச்சி எனல் எப்படி? 217

ஒரு சொல்லின் பொருள், அதனை மனம் உணர்ந்துகொள்ளும் பரிமானம். மனவுணர்வின் வளர்ச்சி. -- 218

சித்தத்தின் தெளிவே சொல்லின் பொருள். -- 219 

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம்  - சிவஞான சித்தியார் மூலம்  பாடல் 219 முடிய. 

No comments:

Post a Comment