Pages

Thursday, 9 April 2026

இறைவன் ஒரு கருவி அல்லன் God is not a tool.

சிவன்
  • உலகெலாம் ஆனான்
  • உலகத்தின் வேறு ஆனான்
  • உலகத்துடன் ஒளியாய் ஓங்கினான்
  • அலகிலா உயிர்கள் கன்மத்து ஆணையில் நகர்ந்து செல்ல ஆளும் தலைவனாய் இருக்கிறான். 
  • அவற்றின் தன்மை தனக்கு எய்தாத அமலனாய் இருக்கிறான். --91
0
  • மறைகள் அவனை ஒன்று என்று சொல்கின்றன.
  • உயிர்களுடன் ஒன்றி இருக்கிறான். 
  • அகர ஒலி அனைத்து ஒலிகளிலும் சேர்ந்திருப்பது போல் இருக்கிறான். -- 92
0
  • கருவி பயன்படுத்தும்போது உயிர் பெறுவது போல், உயிருடன் மருவியும், மருவாமலும் இருக்கிறான். 
  • அவன் கருவி அல்லன் -- 93
0
  • உயிர்கள் இருவினை இன்ப துன்பத்தில் வினைப்பயனோடு மறுமையில் பிறந்து இறந்து வாழச் செய்கிறான். -- 94
0
  • மலரில் மணம் வருகிறது
  • தீயில் வெம்மை வருகிறது
  • இப்படி வினைப்பயன் உயிரோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. -- 95
0
  • அசித்து அறிவில்லாப் பொருள்
  • அறிவு என்பது உணர்வு
  • அசித்துக்கு இன்ப துன்பங்கள் இல்லை. -- 96
0
  • செய்தி என்பது முன் பிறவியில் செய்த வினைப்பயன். 
  • இம்மையில் பொருளை ஈட்டி இம்மையிலேயே சிலர் இன்பம் துய்ப்பர் 
  • நல்வினைச் செய்தி உள்ளவர்  இம்மையில் பொருள் ஈட்டாமலையே இன்புறுவர். -- 97
0
  • பொருளை ஈட்டும்போது வினைப்பயன் சோம்பலை உண்டாக்கும். 
  • பொருளை ஈட்டாமல், முன்னோரால் செல்வம் பெற்றவர் ‘கொடுத்துவைத்தவர்’. நல்வினைப்பயன் பெற்றவர். -- 98
0
  1. செல்வப் பேறு
  2. துய்க்கும் இன்பம்
  3. செல்வ இழப்பு
  4. பிணி
  5. மூப்பில் தளர்வு
  6. சாவில் துன்பம் 
  • ஆறும் 
  • கன்ம வினையால் வந்து சேரும். -- 99
0
  • வித்தில் மரம். மரத்தில் வித்து. தோன்றுவது போல் வினைப்பயன் விளையும். -- 100

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பிரமாணவியல்,  இரண்டாஞ் சூத்திரம் பாடல் 100 முடிய   

No comments:

Post a Comment