மாத்தியமிகன் மதம் என்பது புத்த மதப் பிரிவுகளில் ஒன்று. இது உடல் நலம் போற்றும் சமயம்.
👍
உடலின் உள்ளேயும் புறத்தேயும் இருக்கும் உறுப்புகள் இல்லை என்றால் நமக்கு வேறு என்ன இருக்கிறது? உடல் நலமே நமக்கு வேண்டிய பொருள். எனவே நம் உறுப்புகள் நலமுடன் இருக்க வேண்டும் - என்று மாத்தியமிகன் சொன்னான். -138
👍
சிவஞான சித்தாந்தி அதனை மறுத்து, விளக்கம் தருகிறான்.
👍
உடம்பு ஒரு குடம். அந்தக் குடத்துக்கு உணர்வு என்னும் உயிர்க்காந்தம் இருக்கிறது.. உடலையும், உணர்வையும் நாம் காப்பாற்ற வேண்டும். -139
கருவி வேறு; அது தீட்டப்பட்டு மின்னும் ஒளி வேறு என்று என்னும் கருத்து ஒருபுறம் இருக்கட்டும். உடலுக்கு அறிவுக்கூர்மை வேண்டும். அறிவின் கூர்மையைப் புத்தி என்கிறோம். புத்தி இருந்தால் அறிவு பயனுள்ளதாக இருக்கும். -140
👍
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம் - சிவஞான சித்தியார் மூலம்
No comments:
Post a Comment