புத்த மதத்தின் 4 பிரிவுகளில் ஒன்று வைபாடிகன் மதம். வெளியில் தெரியும் பொருள் உண்மையானவை என்பது இதன் கோட்பாடு. சிவஞான சித்தியார் மூலம்
வைபாடிகன் மதம்
நூற்றுக்கணக்கான மஞ்சளின் குழம்பு வண்ணத்தைத் தோற்றுவிக்கும். அது மஞ்சள் வண்ணம். இது போன்றது நாம் அடையும் வீடுபேறு. 141
இப்படிக் கூறும் வைபாடிகனை சிவஞான சித்தி பெற்றவன் மறுத்து விளக்குகிறான்.
பொருள் புறத்தே இருக்கிறது. அறிவு உயிரின் உள்ளே இருக்கிறது. உயிரில்லாப் பொருளுக்கு அறிவு இல்லை. எனவே பொருளும் அறிவும் ஒன்றுசேர்வது இல்லை. அவுணர் ஞேய (அன்பு) உருவம் கொண்டவர். 142
பொருளது புறம்ப தாகும் போதம்அந் தரம தாகும் தெருளிடின் இரண்டுஞ் சென்று சேர்ந்திடு மாற தின்றாம் அருவுணர் உருவ ஞேய மாதலி னாலுங் கூடா உருவரு வுடைய வைபா டிகற்கினி மாற்றம் இன்றே. -142
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம்
No comments:
Post a Comment