அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம்
சௌத்திராந்திகன் மதம்
புத்த மதத்தில் சௌத்திராந்திகம் வைபாடிகம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு.சௌத்திராந்திகம் பிடக சூத்திரங்களை (புத்தர் வாக்குகள்) மட்டும் அடிப்படையாகக் கொண்டது.பொருள்கள் கணந்தோறும் அழியும். அவற்றை அறிவின் வழியாகவே அறியமுடியும் என்னும் கோட்பாட்டைக் கொண்டது.
🌳
கொல்லாமை, திருடாமை,முறையற்ற சிற்றின்பம் தவிர்த்தல், பொய்யாமை, கள்ளுண்ணாமை என்பவை புத்தரின் பஞ்சசீலக் கொள்கைகள். 64
புத்தன் வாக்குகளே பிடகம். 65
இவை அளவை, காட்சிமானம் என இரண்டு வகை. ஞானம், ஞேயம், அருவம், வீடு என நான்கு. 66
பூதங்கள் உருவம். சித்தம், கன்மம் இரண்டும் அருவம். குற்றம், கந்தம் ஆகியவை வழக்கியல் 67
🌳
மண், புனல், அனல், கால், வலிமை, மணம், இரதம், வன்னம் என எட்டு வகை கொண்டது உலகம். சித்தம் இவற்றை நன்று, தீது என்று பாகுபடுத்திக் காணும். 68
குற்றம் என்பது கணக்கு முறை. வீடு ஐம்புலன்களைக் கடந்தது. தொகை, தொடர்பு அறாமை, மிகுத்துரை என இதில் மூன்று நிலைகள் உண்டு. இவை இரண்டு வழக்கங்கள். மூன்றும் இரண்டும் உறழ இவை ஆறு. 69
ஐம்பூதங்களும் தன்னுள் அடங்கியவன்தான் ஒருவன். இது தொகையுண்மை வழக்கம். இவ்வைந்தும் இல்லாதவன் தொகையின்மை வழக்கத்தின்பாற் படுவான். 70
🌳
மூன்று கால நிலைகளிலும் காரண காரியத் தொடர்ச்சி இருக்கும் வழக்கமும், தொடர்ச்சி இல்லா வழக்கமும் உண்டு. 71
தோன்றுபவை அழியும். மாறும். வேறுபடும். வேறுபடுவது மிகுத்துரை. 72
உள்வழக்கு, இல்வழக்கு என்று இரண்டு வழக்குநிலைகள் உண்டு. 73
உள்ளங்கை - இது உள்ளது சார்ந்த உண்மை, உரோமம் - இது உள்ளது சார்ந்த இன்மை, நாணம் - இது இல்லது சார்ந்த உண்மை 74
வானம் – ஆன்மா. இறை உண்டு எனல் நித்தம். 75
🌳
இறை இல்லாத உருவம் இல்லை. 76
எல்லா உயிருக்கும் அறிவு உண்டு. 77
ஐம்புலன்களிலும் அறிவு உண்டு. 78
ஞானமே அறிவு 79
உரு, அரு, அணு, காலம் என்று உயிரைச் சொல்லமுடியாது. 80
🌳
உயிர் உடலில் எங்கும் இருக்கும் என்றோ, இங்கு இருக்கும் என்றோ சொல்லமுடியாது. எங்கோ இருக்கும். 81
காலந்தான் உயிரைத் தோற்றுவித்து, அளித்து, போக்கும். 82
மேற்கு, கிழக்கு என்பதெல்லாம் ஒருவனை மையமாகக் கொண்டது. 83
உலகினைப் படைத்தான் என்றால் அதைப் படைப்பதற்கு முன் அங்கே என்ன இருந்தது? 84
உலகை உண்டாக்கினான் என்றால் எங்கே நின்றுகொண்டு உண்டாக்கினான்? 85
🌳
உலகை ஒருவன் உண்டாக்கினான் - என்பவன் பித்தன். 86
உலகைப் படைப்பது இறைவன் விளையாட்டு என்றால் இறைவன் ஒரு குழந்தையா? படைத்தல் அவன் கன்மம் என்றால் அவனுக்கு முற்பிவி உண்டு என்றாகும். எனவே உலகம் அநாதி. 87
உருவொடு நின்றால்தானே படைக்க முடியும்? அப்படியென்றால் அவனைப் படைத்தவன் யார்? 88
இறைவன் அரு என்றால் அரு எப்படி உருவை உண்டாக்க முடியும்? அவனை நிழல் என்றால் அவனுக்கு உருவம் இருக்குமல்லவா? இறைவனுக்கு உருவம் இல்லையே 89
அதனால் எங்கள் நூல் இறைவனை அநாதி என்று கூறுகிறது. 90
🌳
புற்று, மயிர், கொம்பு போல உலகம் தோன்றிற்று. இது மற்றொன்றுக்குப் பயன்படும். 91
கொன்றதைத் தின்றாலும் குற்றமே. 92
உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் ஆகிய ஐந்தும் அழிந்தால் முத்தி. 93
அருவருப்பை நீக்கு. அறம் செய். இழிந்த புலச் செயல்களை வாட்டு. இவை அறிவின் குணம். இவற்றால் சமாதி அடையலாம். 94
🌳
சௌத்ததிராந்திகன் மறுதலை
சௌத்ததிராந்திகனை மறுத்தல்
🌳
சிவன் அனைத்தும் உணர்ந்தவன் 95
சிவன் ஒன்று பலவாய் இருப்பவன், உணர்பவன். 96
அவன்மீது உள்ள ஆசை நம்மை அவனிடம் கொண்டுசேர்க்கும். 97
சிவன் நீர் போல் ஒன்றி இருப்பவன். 98
கன்மத்தால் அளவில்லாப் பிறவி உண்டாகும். 99
கணவனை இழந்தவளின் கண்ணைக் குத்துபவனுக்கும் இரங்குவன் சிவன்.
100
🌳
ஒரு பொருளைக் கண்டுபிடித்து அதனைச் சொல்வதற்கு முன் அது மாறிப்போகும். 101
இறைவனை உணர்ந்துகொண்டு புத்தர் சொன்னார் என்கிறாய். அந்த இறைவன் யார்? 102
ஆயின் புத்தன் அநாதி இல்லை. 103
முன்நூல், வழிநூல், சார்புநூல் இவற்றில் புத்தர் பிடகம் எந்த வகை? 104
ஒளி தரும் விளக்கை எண்ணெய், திரி இரண்டின் கூட்டு என்கிறாய். 105
🌳
அநுமானம் விட்ட பொருள்தான் ஆகமம். 106
அநித்தம் என்பது உள்ளதற்கா, இல்லதற்கா, உளதிலதாய் இருப்பதற்கா? 107
பொருள் முளை, இலை, மரம் என மாறும். 108
வளரும் வினை, தேயும் வினை என்பன இருவினை. 109
நெல் விதையில் நெல்லம்பயிர்தான் முளைக்கும். பாக்குமரம் முளைக்காது. 110
🌳
மண்ணுக்கு மணம் உண்டு. நீர், தீ, காற்றுக்கு மணம் இல்லை. 111
மருந்து எண்ணெயில் மருந்து இருப்பதை போல் குணம் இருக்கும். 112
நித்த நித்தம் புதுப்புது உண்ணர்வுகள் தோன்றும். 113.
ஓடும் நீர் போல் உணர்வு அழியும். 114.
பிள்ளை பிறப்பது காரணமா, காரியமா? 115
🌳
பொருளின் திரிவுதான் காலம். 116
உணர்வு உடலில் இடையறாது உதிக்கும். 117
செயல் போல உணர்வும் ஒரு வினை. 118
பேய், நரகர், சுரர், பிரமர் ஆகியவற்றுக்கு ஆதாரம் இல்லை. 119
ஐம்பூதங்களை வெவ்வேறு என உணர்ந்தவர் அஞ்ஞானியா? 120
🌳
உறக்கதில் ஐம்பொறிகளுக்கு உணர்வு இருக்குமா? 121
மொழியும், அதனை மொழிந்தவனும் வெவ்வேறா? 122
புலன் வழியே சித்தம் செல்லும். 123
உணர்வு வேறு; உள்ளுணர்வு வேறு. 124
உறக்கத்தில் தோன்றும் நினைவலைகள் கனவு. 125
🌳
ஒரு பழத்தின் சுவைப் பதிவு மீண்டும் அதனை உண்ணத் தூண்டுகிறது. 126
காலந்தான் நாம். 127
உலகின் இயக்கம் ஒரு செயல். 128
மரங்களும் உயிரினங்களே. 129
மரத்தில் ஒரு கிளையை வெட்டி நட்டால் புதுமரம் வளர்கிறது. எனவே மரம் மழுவதும் ஒரே உயிர் அன்று. 130.
🌳
உண்ணக் கொன்றாலும் பாவமே. 131
குடைநிழலும், கண்ணாடிப் பாவையும் போன்றது பிறப்பு. 132
ஐம்புலனும் அவிந்தால் முத்தி அடைபவர் யார்? 133
மனத்தை அடக்கி வழிபடுபவனை அரன் தன் கருணைக் கையால் எடுத்து இன்ப முத்தியில் வைப்பான். 134
No comments:
Post a Comment