Pages

Saturday, 28 March 2026

சிவஞான சித்தியார் - கற்பனை உண்மை அன்று

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம் 


உலகாயதன் மதம் 

உலகம் எதனால் ஆயது - அதனைக் கூறுவது உலகாயத மதம். 

நிலம், நீர், தீ, காற்று என்னும் 4 பூதங்கள் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, என்னும் 5 புலனுணர்வுகள் - இந்த உணர்வுகளைப் பதிவாக்கி வைத்துக்கொள்ளும் மனம் ஆகியவற்றை மட்டுமே நம்புவது உலகாயத மதம். உலகாயதன் கோட்பாடு.

அறிந்தவற்றைக் கொண்டு கற்பனை செய்து அனுமானிப்பதை இந்தக் கோட்பாட்டாளன் ஏற்பதில்லை. 

இது இக்கால ஈ வே ரா பெரியார் கொள்கை போன்றது.

இந்த மதத்தைப் பற்றி இவன் கூறுகிறான்.  கருத்தோட்டம் 

(இங்குள்ள எண்கள் பாடலின் வரிசை எண்களைகளைக் குறிக்கும்) 


இந்திரன் என்னும் புரோகிதன் சொன்ன நூலில் உள்ளது.  12

அளவை, காட்சி, மனம், அனுமானம், பூதம், புகழ், - எல்லாம் சலனம் 13

நாற்றம், குருதி, உருவம், உணர்வு ஆகியவற்றின் கலவையே -  தலம், புனல், கனல், காற்று -14

புணர்ச்சியினால் உருவங்கள் தோன்றும். அதுபோல, புலன்களால் குணங்கள் தோன்றும். -15

எந்தப் பூத உணர்வு இல்லையோ அதன் புல உணர்வும் இருக்காது. -16

இப்படி இருக்கும்போது, கன்மம், உயிர், இறைவன் ஆகியவை வேறு வேறு என்கின்றனர். மனிதன் என்ன குற்றம் செய்தான்? --- மலடி பெற்ற மகன் முயல் கொம்பில் ஏறி, ஆகாயப் பூ பறித்தான் --- என்பது  போல் சொல்கின்றனர். -17

கன்மம் செய்தவனைப் பற்றிக்கொண்டு செல்லும் என்றால் அது எங்கே எப்போது மாயும்? உடம்பு போனபின் உயிர் சூக்குமமாகச் செல்லும் என்கின்றனர். விளக்கு அணைந்த பின்னர் அதன் ஒளி எங்கே போயிற்று? -18 

நெல்லம்பயிர் மாண்டு வைக்கோல் ஆகும். அதன் நெல் மீண்டும் முளைக்கும். அதுபோலக் கன்மம் முளைக்கும் என்றால், உண்ட சோறு மலமான பின்னர் உணவாவது எப்படி? -19

கன்மமானது  உருவம், உணர்வு, செய்தி  ஆகியவற்றை ஒத்திருப்பதில்லை என்றால், கை விரல்களின் வளர்ச்சி ஒரேமாதிரி இருப்பது எதனால்? -20

கன்மத்தால் இன்பம் துன்பம் விளையும் என்றால், மின்னலில் தீ எப்படி வந்தது? அது அதன் இயல்பு அல்லவா? -21

உயிரின் குணம் உடம்பின் தன்மை. தனியே ஒரு ஆன்மா எங்கே இருக்கிறது? மனம் முதல் ஆறும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஆன்மா உண்டு என்பது முயலுக்குக் கொம்பு உண்டு என்பது போன்றது. -22

அருவமே இறைவன் என்றால் அறிவு என்ன உருவமா? இறைவனுக்கு உருவம் உண்டு என்றால் அவன் பூத கணங்களில் ஒருவன். இறைவன் உருவமும் அருவமுமாய் இருக்கிறான் என்றால், அருவாகிய வானம் கல் உருவம் கொள்ளுமா? -23

பூதம் உணவால் வாழ்கிறது. உணவால் புத்தி வேறுபடுறது. பூதம், உணவு, மனம் – இந்த மூன்றைத்தான் இந்திரன் வேதம் சொல்கிறது. -24

மண்ணில் இன்பம் கண்டவர் விண்ணில் எத்தகைய இன்பத்தைக் காணப்போகிறார்கள்? -25

உயிருக்குத் தோழன் உன்னை விட மேலானவர் இல்லை. நீயே கொலை களவு செய்யலாமா? -26

ஈசன், அயன், மால், இந்திரன் – ஆகியோரும் பெண்களை வைத்திருக்கின்றனர். நீயும் பெண்ணோடு கூடி வாழ். -27

பெண்ணோடு கூடி இன்புறாமல் மனத்தில் ஆசையை வைத்துக்கொண்டு வேடத்தார் மாய்கின்றனர். -28

மகளிர் இன்பத்தைத் துய்க்காமல் ஆசை கொண்டிருக்கும் மாசு பட்ட மனத்தருக்குத் துன்பந்தான். -29

மகளிர் போகம் விட்டவர் புன் சமயத்தார். -30

மகளிர் இன்பத்தில் மூழ்குபவர் முத்தர். -31

வீடு உளது என்று ஓடி ஏங்கி மெலிவது ஏன்? வீடு கண்டார் உண்டோ? ஈட்டிய பொருளைக் கொண்டு இன்பத்தில் மூழ்குங்கள். -32

உலகாயதன் மத மறுதலை 
உலகாயதன் மதத்தை மறுத்து வினவல் 

கண்டதுதான் உள்ளது என்றால், இறந்துபோன உன் தாய் தந்தையர் உன் மனத்தில் இருக்கின்றனரே, அது எப்படி? -33

மழைநீர் வெள்ளமாக வருகிறது. வெள்ளத்தைப் பார்த்து மழை பெய்த்து என்று நம்புவதில்லையா? -34

அதுபோல உடல் பிரமாணம். உயிர் அனுமானம். -35

முன்னர் நிகழ்ந்தவற்றைக் கொண்டு அனுமானித்து முன்னோர் எழுதிவைத்தது சோதிடம். -36 

தென்னை இருக்கிறது என்றால் அதனை நட்டவன் ஒருவன் இருந்திருக்க வேண்டும் எனல் அனுமாணம். குளிர் நீரில் குமிழி தோன்றுகிறது என்றால் அது காற்றின் செயல். காற்றின் செயல் நமக்குத் தெரியவில்லையே. -37

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வேறு நிறம் வரவில்லையா? -38

வேறு நிறம் தோன்றச் செய்தவன் ஒருவன் உண்டு என உணர்ந்துகொள். -39

ஐம்பொறி உணர்வு, உண்டி செரிமானம், உறக்கம், அச்சம், ஆற்றல் முதலானவை உடலுக்கு உண்டானது எப்படி? -40

ஐந்து பூதங்களின் புணர்ச்சியால் குணம் தோன்றுமா? -41

அறிவுதான் ஐம்பூதம் என்றால் அவற்றில் அறிவை ஐம்பொறிகளால் உணர முடியவில்லையே -42

அறிவு உடலின் குணம் என்றால் பெரிய உடலில் அதிக குணமும், சிறிய உடலில் கொஞ்ச குணமும் அல்லவா இருக்க வேண்டும்? -43

ஓதுவதால் அறிவு பெருகும் என்றால், கற்றவன் உடல் பெரிதாகவும், கல்லாதவன் உடல் சிறிதாகவும் அன்றோ இருக்க வேண்டும்? -44

ஆணும் பெண்ணும் கூட ஆசை எங்கிருந்து வந்தது? -45

நீரும் தீயும் சேர்ந்திருப்பதைப் பார்த்தது உண்டா? ஆணும் சேர்ந்திருக்கிறார்களே -46

நாதன் நாயகி கூட்டமே நம்மிடம் காதலாக உள்ளது. -47

நீரில் மணமும் நிறமும் சேர்வது போல் கன்மத்தால் சுகமும் துக்கமும் தோன்றும். -48

இன்புறுதலுக்குக் காரணம் வினைப்பயன் இல்லை என்றால், துன்புறுவது எதனால்? -49

அணுக்களுக்கு அநாதி பற்றித் தெரியாது. -50

செய்பவனுக்குச் செயலின் காரணம் புரியாது. -51

விளக்கின் சுடர் எண்ணெயில் எரியும். அதுபோல கன்மம் ஆசையில் தோன்றும். -52

கனவில் கண்டது நனவில் வராதது போல முந்தைய உடலின் அறிவு பிந்தைய உடலின் அறிவுக்குத் தெரியாது. -53

உறங்கும்போது உடலில் இருந்த உணர்வு எழுந்தபோதும் இருப்பது போல, முற்பிறவி உணர்வுகள் இப்பிறவியிலும் இருக்கும். -54

செயல் மூச்சுக் காற்றின் வலிமையால் நிகழும். -55

மண் என்னும் குயவன் படைத்தது உடல். -56

வேதன், நாரணன், ஆரணம் மூன்றும் நாம் அறியா விழுப்பொருளின் காலடித் தாமரை நீ -57

பொன் மணி அணிகலன் மலத்தில் கிடந்தால் கையால் எடுப்பாரோ? அப்படிப்பட்டதுதான் பெண்ணின் மூத்திர வழி. -58

தோல், இரத்தம், இறைச்சி, எலும்பு, மச்சை, வியர்வை, அழுக்கு, புழு, கோழை, ஈரல், மூத்திரம், மலம் இருக்கும் பாத்திரந்தான் பெண்ணின் உடம்பு. -59

இதில் இன்பம் காணாமல் ஈசன் அடிகளில் இன்பம் காணவேண்டும். -60

வஞ்சம் வைத்திருப்பவனுக்குச் சாந்தி தெரியாது. ஆசை கொண்டவனுக்கு ஆசையை விடமுடியாது. -61

காமம் முதலான குணங்கள் எரியும்போது என்ன சுகம் கண்டீர்? -62

பதி, பசு, பாச உணர்வோடு, ஈசன் கழல் ஏத்தி, மும்மலம் விட்டு, நின்மலனோடு நிற்றலே முத்தி. -63


No comments:

Post a Comment