Pages

Friday, 27 March 2026

சிவஞான சித்தியார் - நூல்

சிவஞான சித்தியார் என்னும் நூல் பரபக்கம், சுபக்கம் என்று இரண்டு பாகங்களாக உள்ளது. 

இதனை இயற்றியவர் திருத்துறையூர் - அருணந்தி சிவாச்சாரியார்.


பாடல் மூலம்


இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளை இங்குத் தொகுப்பாகக் காணலாம்.


பரபக்கம்

இப்பகுதியில் 301 விருத்தங்கள் உள்ளன. 

14 மதவாதிகளின் விளக்கங்களும் அவற்றிற்கான மறுப்புகளும் இதில் உள்ளன.


1. உலகாயதன் மதம் 2. சௌத்திராந்திகன் மதம்  3. யோகாசாரன் மதம் 4. மாத்தியமிகன் மதம் 5. வைபாடிகன் மதம் 6. நிகண்டவாதி மதம் 7. ஆசீவகன் மதம் 8. பட்டாசாரியன் மதம் 9. பிரபாகரன் மதம்  10. சத்தப் பிரமவாதி மதம் 11. மாயாவாதி மதம் 12. பாற்கரியன் மதம் 13. நிரீச்சுரசாங்கியன் மதம்  14. பாஞ்சராத்திரி மதம்

சுப பக்கம் 328 விருத்தங்களைக் கொண்டது. 

இது பாயிரம், அளவை, பிரமாணவியல், இலக்கணவியல், சாதனவியல், பயனியல் என 6 பிரிக்கப்பட்டு, 14 சூத்திரங்களைக் கொண்டதாக உள்ளது. 

  • இங்குச் சூத்திரம் என்பது நெற்கட்டு போல் கருத்துக் கட்டுகள் கொண்ட அமைப்பினைக் குறிக்கும்.  

காப்புப் பாடல்  


ஒரு கோட்டான், இரு செவியன், மும்மதத்தான், நால் வாயான், ஐந்து கரத்தான் என்று ஆனைமுகனைப் போற்றுகிறது. 1

மங்கல வாழ்த்து


இப் பகுதியில் 5 தெய்வங்கள் போற்றப்பட்டுள்ளன. 

சிவன் 

ஆதி, நடு, அந்தம் இல்லாதவன். சோதி உருவினன் . உலகைப் படைத்த உமையாளைப் பாகமாக் கொண்டவன். இவனை வானோரின் மகுடம் என்று வையத்தார் போற்றுகின்றனர். தலையில் பிறை, தாமரை மலரும் கங்கை ஆகியவற்றைக் கொண்டிருப்பவன். 2

சத்தி

ஈசனுக்கு இன்பம் தருபவள். உயிர்களையெல்லாம் பெற்றுத்தருபவள். -3

விநாயகன்

நூல் இயற்றுவோரின் இடர்களைப் போக்குபவன். -4

சுப்பிரமணியன்

அகத்தினுக்கு ஓதவேண்டியனவற்றைச் சொன்னவன், கந்தன். -5

மெய்கண்ட தேவ நாயனார்

இவர் இந்த நூலாசிரியரின் குரு. இவரை இவர் சிவம் மணக்கும் மெய்கண்ட தேவர் என் தலையில் (நினைவில்) இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். -6

அவையடக்கம்


நுரை கொண்ட கடலலை காலைத் தொடுவது போல் நூலுணர்ந்த அருந்தவத்தோர் அடிகளை மனம் குழைந்து தொழுகிறேன். 7

மகன் மகள் மழலையில் இன்பம் காணும் தாய்தந்தையர் போல, புலமையோர் என்னைக் கொள்வர்     8

நூல் சிறப்பு


நீரெல்லாம் கடலை அடைவது போல, ஆன்மாக்கள் இறைவனை அடைவது பற்றிச் சொல்வது இந்த நூல்    9

நூல்


இறைவன் நந்திக்கு, நந்தி சனற்குமாரனுக்கு, சனற்குமாரன் மக்களுக்குக் கூற, அதன் வழி எம்  குரு எனக்கு இச் செய்திகளைக் கூறனார். 10

கருத்து


இறைவன், இறைவன் இயல்பு, பொருளின் இயல்பு, பெறும் முறைமை, புகழ், முத்தி, கானல்நீர் போன்று தோன்றும் பொய்-நெறி, - ஆகியவற்றை வினா-விடை நடையில் இந்த நூல் சொல்கிறது.     11

No comments:

Post a Comment