சித்தாந்தம்
12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றிய திருவுந்தியார் இறைவனைப் போற்றும் நூல். இதில் உள்ளவை 45 பாடல்கள். அவை இறைவன் சித்தத்தில் உள்ளவன் என்று கூறுகின்றன.
இது மெய்கண்ட சாத்திரங்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ள 14 நூல்களில் ஒன்று.
திருவாசகத்தில் திருவுந்தியார் என்னும் தலைப்பில் 20 பாடல்கள் உள்ளன. பெரியாழ்வார் பாடியவை 10 உள்ளன. இவை காலத்தால் முந்தியவை.
திருவாசகம் தோன்றிய காலத்தில் இந்தியாவில் சிவனைப் பற்றிய கட்டுக்கதைகள் மக்கள் மனத்தில் பதிந்திருந்தன. அந்தக் கதைகளை வைத்துப் பாடித் திருவாசகம் சிவனை இறைவன் எனக் காட்டுகிறது. – இது சைவ நெறி.
பெரியாழ்வார் பாடல்களும் கதைகளைத் தழுவியனவாகவே உள்ளன.
சிவப்பிரகாசர் நம் சித்தத்தில், சித்தமாக இருக்கும், - உள்ளத்தில் உள்ளமாக இருக்கும், - மனத்தில் மனமாக இருக்கும், - அறிவில் அறிவாக இருக்கும், இறைவனை நமக்குக் காட்டுகிறார். – இது சித்தாந்த நெறி.
இந்த வேறுபாட்டை மனத்தில் வைத்துக்கொண்டு நாம் நூலை அணுக வேண்டும்.
உந்தீ பற என்பது ஒரு விளையாட்டு
இரண்டு சிறுமியர் ஒருவர் மற்றொருவர் கால்களை உதைந்துகொண்டு, கைகளால் மற்றவர் கைகளைப் பிடித்துக்கொண்டு சாய்ந்த வண்ணம் சுழல்வர். அப்போது இருவரும் இறைவனை (தலைவனை)ப் போற்றி மாறி மாறிப் பாடுவர்.
பதிவில் உள்ள பாடல்
கருத்தோட்டம்
1
- களம் என்பன இடம். அகளம் என்பது இடம் இல்லாத காலம். இறைவன் காலமாகவும், இடமாவும், சகலமுமாகவும் இருக்கிறான்.
- அவன் நம்மொடு கூடியும் கூடாமலும் இருக்கிறான்
2
- கூடியும் கூடாமலும் இருக்கிறான் என்றால் அவனுக்கு 2 நிலைகளா?
- இல்லை ஒன்றுதான்.
3
- தம்மோடு சேர்ந்திருக்கும் ஆற்றல் தேவியைக் கொண்டு செயலாற்றுபவர் நம் உடம்புக்குள் வரமாட்டார்.
- ஆயின் அவனுக்குப் பிறப்பு-இறப்பு இல்லை.
4
- எப்படி இருக்கிறான்? எந்த வண்ணத்தில் இருக்கிறான்? விரலும் நகமும் போல இருக்கிறான்
- நம் அறிவுக்குத்தான் அது தெரியும்.
5
- அவன் ஒருவன். பல. தலைவன்.
- நம்மை ஆள்பவன்.
6
- நம் செயல் அவன் செயல்தானே?
- அவன் தன்னையே தனதாக்கிக் கொண்டவன் ஆயிற்றே?
7
- உள்ளம் உருகாமல் அவனைச் தெரிந்துகொள்ள முடியாது.
- புலனுணர்வாக இருக்கிறான்.
8
- அவன் நமக்கு ஆதாரமாகவும், ஆதாரம் இல்லாதவனாகவும் இருக்கிறான்.
- அவன் மலம் அற்றவன்.
9
- ஆக்கத்தில் தோன்றுபவனாகவும், ஆக்கம் இல்லாதவனாகவும் இருக்கிறான்.
- அவன் ஒரு பாவனை.
10
- ஐம்புல உணர்வாக இருக்கும் அவனை உணர்.
- அவன் துய்க்கப்படாத பொருள்.
11
- அவன் தாதகி (ஆத்தி)
- நோக்கமொடு நோக்கம்
12
- மூலையில் இருந்தவரை முற்றத்துக்குக் கொண்டுவந்த பெரியவன்.
- தவத்தின் தலைவன்
13
- தன்னோடு ஒட்டாமல் இருப்பவருக்கு உணரும் அறிவை ஊட்டுபவன்
- நாம் தேடுமிடத்தில் அவன் இருக்க மாட்டான்.
14
- உனக்கு உரியது உன் ஆற்றல். அதனைப் கிளப்பி எழுப்பு.
- அதுவே உன்னைக் காணும்.
15
- பயிற்றுவித்தால் பற்றை அறுக்கலாம்
- பாவனை செய்தால் பற்று விலகாது
16
- பற்றை உழுது பயிரிடாதே. பற்றைத் தழுவாமல் நில்
- சுவைக்கு அடிமைப்பட்ட நாக்கு போன்றது பற்று.
17
- சிலம்பொலியைக் கேட்டுக்கொண்டு விண்ணில் ஆடும் கூத்தனைக் கும்பிடு.
- அவனைப் பார்த்துக்கொண்டிரு.
18
- மருளும் தெருளும் அவனை மறைக்கும். அவன் அருளை மறைக்காதே.
- அவன் அருள் ஒன்றுதான் இங்கே இருக்கிறது.
19
- நினைப்பதற்கு முன்னர் உன் நினைப்பை அழித்துக்கொண்டு அம்மையப்பன் பாய்ந்துவிடுவான்
- அதனால் அவனைப் பார்க்க முடியாது.
20
- இரவு பகல் இல்லாத அவனது இன்ப வெளிக்குள் நீ இரு.
- அவனோடு கலந்திரு.
21
- சொல், பொருள், சொல்லாதன, அல்லாதன ஆனான்
- அம்பிகை பாகன்
22
- மூச்சுக் காற்றை மாற்றி விட்டுக்கொண்டு நினைப்பது அவன் ஆற்றல்,
- அவன் அல்லா எப் பொருளும் இல்லை; செயலும் இல்லை.
23
- அவன் கள்ளன். கள்ளம் இல்லாதவன். அவனோடு கலந்திருத்தல் இன்ப வெள்ளம். இன்ப வெளி.
- நாம் அவன் வீடு பேற்றைப் பெறுதல் எளிது.
24
- அவனது எட்டுக் குணங்களைக் கொண்டவரை அவன் தொட்டுக்கொண்டிருக்கிறான்.
- அவன் வீடே நம் வீடு.
25
- நம் சித்தமும், தீய செயல்களும் அவன் சித்து விளையாட்டு.
- நம்மிடம் சேரவேண்டியது அல்லாதது நம்மைச் சேராது.
26
- உள்ளும் புறமும் அவன் இருப்பதை உணர்தல் அமுதம்
- அவன் நம்மில் முளைக்காமல் இருக்கும் பாகம்
27
- அவிழ்ந்து, கவிழ (மலர்ந்து, சாய) இருக்கும் உடலில் அவர் நிற்கிறார்.
- அவன் அவிழ்ந்து மலராதவன்.
28
- வித்தில் இருக்கும் அவன் முளைக்காத பித்தன்
- “எனக்கு” எனப் பேணி அவனை வைத்துக்கொள்.
29
- எல்லையாக இருப்பவன் இறைவன். அந்த எல்லை நாம் சொல்லக்கூடிய இடம் அன்று.
- என்கிறானே. என்ன செய்வேன்?
30
- வீட்டில் இருந்தால் என்ன? காட்டில் இருந்தால் என்ன?
- நம் கூட்டுடம்பில் அவன் ஆடுகிறான் என்று அவனை வெளியே விடாமல் சாத்தி வைத்துக்கொள்
31
- மற்ற சமயங்கள் உள்ளே அரிசி இல்லாத சாவி (பதர்) போன்றவை.
- அவன் நெல்லில் இருக்கும் அரிசி போல் நமக்குள் இருக்கிறான்.
32
- அவன் நம் துரியம் கடந்த வித்து. நமது துரியமாகவே இருக்கிறான். (முதல் துரியம் தற்ப்போதம் அதாவது மனித அறிவு. இரண்டாவது துரியம் பரபோதம். இறையறிவு)
- அவன் நம்மைத் துறந்தவன்.
33
- பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய் வரும். இதுதான் முறைமை.
- பேரின்பத்தில் மாயை முளைக்காது.
34
- பேரின்பமான பிரமக் கிழத்தியுடன் தனி இன்பமாக அவன் இருக்கிறான்.
- உன்னை (நம்மை) ஆண்டுகொண்டிருக்கிறான்.
35
- நம்மிடம் இருக்கும் ஆண்-பெண் பிடிப்பு போல, அவன் நம்மிடம் இருக்கிறான்.
- நாம் அவனைக் காணமுடியவில்லை. அவன் நம்மைக் கண்டுகொள்வதும் இல்லை.
36
- நான்கு பூதங்களுடன் ஐந்தாவது பூதமாக இருப்பது நாதம் என்னும் பூதம். அது மின்னல்-இடி போன்றது.
- அது காதல்-காலம் தோன்றும் இடம்.
37
- சென்ற நெறிகள் எல்லாமே நாம் செல்லவேண்டிய நெறி ஆகும்படி அவன் நிற்கிறான்.
- நீ (நாம்) செய்வது அவன் செயல்.
38
- பொன்னாலான கொழு போட்ட கலப்பையால் உழுது கொள் விதைப்பர். அதில் நீ கொழு என்னும் கருவி.
- அறியவேண்டிய அதனை நீ அறியாவண்ணம் அவன் உன்னை வைத்திருக்கிறான்.
39
- அது, இது என்கிறோமே அதுதான் அவன் அறிவு.
- அவன் அவிழாத சடையான்
40
- அவன், இவன் எனல் அவன் அருள். அந்த அருள்தான் இவன் அவன் என்கிறது.
- என்றுமே நமக்கு இவன்தான்.
41
- முத்தி-முதலுக்காகவே மோகம் என்னும் கொடி படர்கிறது. அது அகத்தில் பழுத்திருக்கிறது.
- அதனைத் தின்றுவிடாதே.
42
- அண்டம் முதல் அனைத்தையும் உன்னுடன் வைத்துக்கொள். அவற்றோடு பிடிப்பு வேண்டாம்.
- அதுதான் குறைவற்ற செல்வம்.
43
- உன் மெய்ஞ்ஞானம் காய். அதற்குக் கள் உண்ணத் தெரியாது. மாயம் என்னும் கள்ளை உண்ணும்.
- அது உன்னை வாட்டும் பசு.
44
- சிந்தையில் நினைப்பவை செயலாகச் சேர்வதில்லை. உன் பிறவிக் கணக்கில் அது வராது.
- மனத்தில் ஒருத்தியை நினைத்தால் அவள் உன்னுடன் இருப்பாளா?
45
- வையம் முழுவதும் மலம் இருக்கும் குளம். உன் வாழ்வுக்காக அது இருக்கிறது.
- இதனை உணர்ந்தவரே உண்மை உணர்ந்தவர் ஆவார்.
முற்றும்
No comments:
Post a Comment