சத்து என்பது மரபியல் அறிவு. சித்து என்பது பயிற்சி செய்து பெறும் அறிவு. (எண்ணுக - சச்சிதானந்தம்)
ஆதிசங்கரின் மதம் மாயாவாதம். பாற்கரியன் மதம் இதனை மறுக்கிறது. ஆத்மாவும் பிரம்மமும் இயல்பில் ஒன்றாகவும் தன்மையில் வேறுபட்டும் உள்ளன என்று பாற்கரியன் மதம் கூறுகிறது.
பாற்கரியன் மதம்
மாயாவாதி கூறிய கருத்துகளோடு மாறுபட்டு பாற்கரியன் சொல்கிறான். ஆன்மாவுக்கும் பிரம்மத்துக்கும் உள்ள வேறுபாடுகளை அவன் ஒரு நூலில் சொல்கிறான். -- 253
சித்து (சித்தி) என்பது பயிற்சியால் பெற்ற வலிமை. (அட்டமா சித்தி). இந்த வலிமையால் உயிர் ஒளிர்கிறது. சத்து என்பது மரபு வழி பெற்ற ஞானம். சித்தியே பிரம்மத்தோடு ஒன்றும். -- 254
பாற்கரியன் மத மறுதலை (மாற்றுக் கருத்து)
அறிவு வேறு; அறியப்பபடும் பொருளறிவு வேறு என்கிறாய். ஆயின் அறிவு என்பது பல்வேறு வகைப்படுமோ? -- 255
அறிவு பல வகையது ஆயின் அந்த அறிவு சடப்பொருள் (இயங்காப் பொருள்) ஆகும். -- 256
விதை மரமாவது போல் அறிவு வளருமாயின், அது சடமாய் எழுந்து அழியுமன்றோ? எனவே நீ சொல்வது பித்தலாட்டம். -- 257
மோதிரம், தோடு முதலான அணிகலன்கள் தோன்றிய அறிவினால் செய்யப்பட்டவை. இவற்றைச் செய்பவர் யார்? அணிபவர் யார்? -- 258
அறிவும் செயலும் மாறினால் வீடு பேற்றினை அடைய முடியாது. அது வெறும் உலகியல் இன்பம். அழியும் இன்பம். -- 259
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம் - சிவஞான சித்தியார் மூலம் பாடல் 259 முடிய.
No comments:
Post a Comment