வரதுங்க ராம பாண்டியர் (வரதுங்க ராம பாண்டியன்) என்பவர் அபிராம பராக்கிரம பாண்டியன் மகன்.
பராக்கிரம பாண்டியன் பிள்ளைகள் 3 பேர்.
- வரகுண ராமன் (1588),
- வரதுங்க ராமன்,
- அதிவீர ராமன் (1564).
வரதுங்க ராமன் திருக்கருவை (கரிவலம்வந்தநல்லூர், நெல்லை மாவட்டம்) நகரில் இருந்துகொண்டு பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை ஆண்டுவந்தான்.
இவன் வில்லவனை வென்றான்.
வல்லம் எறிந்தான். மதுரை நாயக்கருத்து துணையாகச் சென்று தஞ்சை அச்சுதப்ப நாயக்கரை வென்றது இந்த நிகழ்ச்சி.
பற்றலர் மண் கொள்ளும் பணிந்தார்க்கு அரசு அளிக்கும்
கொற்றம்உயர்க்கும் அறம் கூறுமே - வில் தடந்தோள்
வில்லவனை வென்று கொண்ட வாரமாறன் செழியன்
வல்லம் எறிந்தான் ஏந்து வாள் (இது இவனது வாள்மங்கலம் பற்றிக் கூறும் சாசனப் பாடல்)
இவன் அந்தணர்க்குத் தானம் வழங்கினான். 1582-ல் சொக்க பண்டிதர் மருத்துவன் சந்திர சேகரனுக்கு முருகனேரி என்னும் ஊரைத் தானமாக வழங்கினான்.
இவனுக்கு அபிராமன், அபிராம சந்திரேசுவரன், வீரபாண்டியன் (வீரமாறன்) என்னும் பெயர்களும் உண்டு.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
16 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 22
No comments:
Post a Comment