Pages

Monday, 16 March 2026

பகைஞரும் உறவர் ஆக்கிடும் பொன்னம்பலவனே

சமயம் மிகு மூவகையில் சார்ந்தோர்க்கும் சிந்தை 
அமைய நெறியோர் தமக்கும் - உமையவள் தன் 
பூமானைச் சந்ததமும் பொன் அம்பலத்து அடும் 
கோமானைக் கொண்டே  குலா 

  • சைவம், வைணவம், சாக்தம் (கடவுள் என்று தனியே ஒருவன் இல்லை) என்பவை 3 வகை சமய நெறிகள். 
  • இவை உமையவள் நெறி. 
  • இவள் கணவன் சிவன். 
  • இவன் எப்போதும் பொன்னம்பலத்தில் ஆடிக்கொண்டிருக்கிறான். 
  • அவனோடு கூடிக் குலாவுங்கள். 

குகையினில் சோணகிரியினில் உற்றும் 
குருபரன்  ஆகி வீற்றிருந்து
வகைபெறக் கருணாயால் எனக்கு அளித்த 
வண்மையை மறப்பனோ அடியேன் 
நகை கொடு புரம் மூன்றையும்  எரித்த நாயகனே
நல்ல சீரடியார் தமக்குப்
பகைஞரும் உறவர் ஆக்கிடும் பொன்னம்பலவனே
பரம ராசியனே  

  • குருநமசிவாயர் தம் ஆசிரியர் குகை நமசிவாய தேவரைப் போற்றிப் பாடுகிறார். 
  • சோணகிரிக் குகையில் குருபரனாக வீற்றிருந்து கருணை வழங்கிய வள்ளலை அடியேன் மறப்பேனா? 
  • முப்புரம் எரித்த நாயபனே! 
  • பரமராசியனே! 
  • பகைவரையும் உறவினர் ஆக்கும் பொன்னம்பலவனே!

குகை நமசிவாய தேவரின் மாணாக்கர் குருநமசியர். இவர் பாடிய நூல் பரம ராசிய மாலை. இது 100 பாடல் கொண்டது. அவற்றில் சில:  

வரலாற்று அற்புதங்கள் \ மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 170

No comments:

Post a Comment