Pages

Monday, 16 March 2026

நமசிவாயா

குகை நமசிவாய தேவரின் மாணாக்கர் குருநமசியர். இவர் பாடிய நூல் நமசிவாய மாலை. இது 100 கண்ணிகள் கொண்டது. ஆத்திசூடி போல அ ஆ எனத் தொடங்கி அமைந்த கண்ணிகள் ன எழுத்து எழுத்தில் தொடங்கும் கண்ணியில் முடிகிகின்றன.  அவற்றில் அச்சில் இல்லாமல் ஏட்டுப்படியில் காணப்படும் 2 பாடல்கள் இவை: 

🐓

சத்தியும் சிவனும் ஆகித் தாணுமாய் சகத்துக்கெல்லாம் 
முத்தியை அளிப்பாய் ஆகி முதல்வனே நமசிவாயா

  • சத்தி, சிவன், தாணு என்னும் நிலைகளில் இருந்துகொண்டு உயிரினங்களுக்கு முத்தி தரும் முதல்வன் நமசிவாயம் 
🐓

பிறை பணி சடையினானே பிஞ்ஞகா அடியார்க்கு எல்லாம்
குறைவு அற வாழ்வு அளிக்கும் கொற்றவா நமசிவாயா

  • தலையில் பிறை, பாம்பு அணிந்திருக்கும் பிஞ்ஞகன் நமசிவாயம். அவன் எல்லார்க்கும் வாழ்வு அளிப்பவன்.
🐓

வரலாற்று அற்புதங்கள் \ மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 176
 

No comments:

Post a Comment