Pages

Saturday, 14 March 2026

சோறு கோண்டு வா

குரு நமசிவாயர் பசியால் வாடிய போதல்லாம் உமையவளைச் சோறு கொண்டுவா என்று பாடி உணவு பெற்றதாக, கூறப்படுகிறது.  

வெண்பாக்கள்

அண்ணா மலையார் அகத்துக்கு இனியாளே
உண்ணாமுலையே உமையாளே - நண்ணா
நினைதோறும் போற்றி செய நின் அடியார் உண்ண
மனைதோறும் சோறு கோண்டு வா

  • அண்ணாமலை உண்ணா முலையாளே!
  • அகத்துக்கு இனியவளே
  • உன் அடியார்க்குச் சோறு கொண்டுவா 

தாய் இருக்கப் பிள்ளை  தளருமோ தாரணியில் 
நீ இருக நான் தளரல் நீதியோ - வேய் இருக்கும் 
தோளியே விண்ணோர் துதிக்கும் திருமுத்து 
வாளியே சோறு கொண்டு வா 

  • தாய் இருக்கும்போது பிள்ளை பசியோடு இருக்கலாமோ
  • சோறு கொண்டு வா

மின்னும்படி வந்த  மேக களத்து ஈசருடன் 
மன்னும் திருமுத்து வாளியே - பொன்னின் 
கலையாளே தாயே என் கல் மனத்தே நின்ற 
மலையாளே  சோறு கொண்டு வா 

  • ஈசனுடன் இருக்கும் பின்னலே
  • பொன்னின் கலையே
  • என் கல் மனத்தில் இருக்கும் மலைமகளே
  • சோறு கொண்டு வா 

நன்றி புனையும் பெரியநாயகி எனும் கிழத்தி 
என்றும் சிவன்பால் இடக்கிழத்தி - நின்ற
நிலக்கிழத்தி மேனி முழு நீலக் கிழத்தி 
மலைக்கிழத்தி சோறு கொண்டுவா 

  • பெரியநாயகி
  • சிவனின் இடக்கிழத்தி
  • நிலக் கிழத்தி
  • நீலக் கிழத்தி
  • மலைப் கிழத்தி 
  • சோறு கொண்டு வா

முத்த நதி சூழும் முதுகுன்றத்து உறைவாளே 
பத்தர் பணியும் பதத்தாளே - அத்தர் 
இடத்தாளே மூவா முலை மேலே ஊரும் 
வடத்தாளே சோறு கொண்டு வா 

  • மணிமுத்தாறு பாயும் முதுகுன்றத்தவளே
  • பத்தர் தொழும் பதம் கொண்டவளே
  • சோறு கொண்டு வா

ஊன் பயிலும் காயம் உலராமல் உன்றனது 
வான் பயிலும் பொன்னடியை வாழ்த்துவேன் - தேன் பயிலும் 
சொல்லியல் நல்லார் துதிக்கும் சிவகாம
வல்லியே சோறு கொண்டு வா.       

  • உன் பொன்னடியை வாழ்த்துவேன் 
  • சோறு கொண்டு வா

கொண்டுவந்தேன் சோறு குகை நமச்சிவாயரது 
தொண்டர் அடி சுகிக்கவே - பண்டு உகந்த 
பேய்ச்சி முலை உண்ட பெருமாளுடன் பிறந்த
தாய்ச்சி சிவகாமி நான்

  • குகை நமச்சிவாயர் தொண்டன் சுகிக்க சோறு கொண்டுவந்தேன் 
  • நான் சிவகாமி
  • பேய்ச்சி முலை உண்டு அவளைக் கொன்ற பெருமாளுடன் பிறந்தவள் நான்

குகை நமசிவாய தேவரின் மாணாக்கர் குருநமசியர். இவர் பாடிய நூல் பரமராசிய மாலை. இது 100 பாடல் கொண்டது. அவற்றில் சில:  

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 166

No comments:

Post a Comment