ஆசரியர் - குகை நமசிவாய தேவர்
மாணாக்கர் - குருநமசியர்.
1
- ஆசிரியருக்கு மாணாக்கர் பணிவிடை செய்துகொண்டிந்தபோது மாணாக்கர் குலுக்கெனச் சிரித்தார்.
- ஏன் சிரிக்கிறாய் என ஆசிரியர் வினவினார்.
- "திருவாரில் சிவன் ஊர்வலம் வந்தபோது தேவதாசியர் நடனம் ஆடிக்கொண்டு வருகின்றனர். அப்போது ஒரு பெண் கால் இடறி விழுந்துவிட்டாள். அவளைப் பார்த்து மற்ற பெண்கள் சிரிக்கின்றனர். அவர்களைப் பார்ந்து (நினைவு) நானும் சிரிக்கிறேன்".
2
- மாணாக்கர் தன் தோளில் போட்டிருந்த துண்டைக் கையில் எடுத்து அதன் நுனியைக் கையால் கசக்கிக்கொண்டிருந்தார்.
- ஏன் கசக்குகிறாய் என்றார் ஆசிரியர்.
- தில்லை கனகசபை விளக்குத் திரியை எலி ஒன்று இழுத்துச் செல்கிறது. திரியின் தீ தில்லயம்பலத் திரைச்சீலையைப் பற்றறிக்கொண்டது. அதனை எல்லாரும் அணைக்கின்றனர். நானும் அணைக்கிறேன் என்று கூறினார்.
3
- மாணாக்கரின் பக்குவத்தை உணர்ந்த ஆசிரியர் மாணாக்கரை மேலும் சோதிக்க விரும்பினார்.
- ஆசிரியர் தாம் உண்ட உணவை ஒரு தட்டில் வாந்தி எடுத்தார்.
- அந்தச் சோற்றை மாணாக்கரிடம் கொடுத்து மனிதர் கால்படாத இடத்தில் கொட்டிவிடு என்று கூறினார்.
- மாணாக்கர் அந்தச் சோற்றை மறைவான இடத்துக்கு எடுத்துச் சென்று உண்டுவிட்டார்.
- கால் படாத இடத்தில் வைத்துவிட்டாயா என்று ஆசிரியர் வினவினர்.
- மனிதரின் கால் படாத இடம் என் வயிறு. அங்கே அதனை வைத்துவிட்டேன் - என்றார் மாணாக்கர்.
4
மாணாக்கரின் திறமையைச் சோதிக்க விரும்பிய ஆசிரியர் ஒரு வெண்பாவின் முதல் பாதியைப் பாடி நிறுத்திக்கொண்டார். பின் இரண்டு அடிகளைப் பாடி முடிக்குமாறு மாணாக்கரிடம் கூறினார். அதன்படிப் பாடப்பட்ட வெண்பா -
ஆல் பழுத்துப் பக்கியினுக்கு ஆகாரம் ஆனது எனவெல் பழுத்து நின்ற நிலை வீணிலென - சாலவனச்செய்யா ஒருத்தருடன் சேர்ந்தும் இருப்பீரோஐயா நமசிவாயா
ஆலமரம் பழுத்துப் பறவைகளுக்கு உணவாவது போல சிவன் தன் வேலைப் பழுக்க வைத்துக்கொண்டு நிற்கின்ற நிலை வீணாகாது - (ஆசிரியர்)
சிவன் தன்னை நினைக்காதவரிடமும் இருப்பானோ (ஆம். இருப்பான்) (மாணாக்கர் முடிபு)
குகை நமசிவாய தேவரின் மாணாக்கர் குருநமசியர். இவர் வரலாற்று அற்புதங்கள் \ மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 167
No comments:
Post a Comment