கோபுரங்கள் நான்கினையும் கண்டமட்டில் குற்றமெலாம்
தீ பரந்த பஞ்சது போல் சென்றதே -நூபுரங்கள்
ஆர்க்கின்ற செஞ்சரண அம்பலவா நின் பாதம்
பார்க்கின்றார்க்கு என்னோ பலன்
- தில்லையிலுள்ள 4 கோபுரங்ககளைக் கண்டவுடனேயே பாவங்கள் எல்லாம் போய்விடும்.
- அதற்கு மேல் அவன் ஆட்டத்தைக் கண்டால் என்ன பலன் உண்டாகும் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.
கண்டமட்டில் கண்டவினை காதம் போம் கையில் அள்ளிக்
கொண்ட மட்டில் கொண்ட வினை கொள்ளை போம் - வண் தமிழ் சேர்
வாயாரவே புகழும் வண்ணச் சிவகாமித்
தாயார் திருமஞ்சனம்
- சிவகாமித் தாயார் திருமஞ்சன நிகழ்ச்சியைக் கண்டாலே வல்வினைகள் நீங்கும்.
- தாயார் திருமஞ்சனம் கண்டால் என்ன பெறலாம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
சங்கமராய் அம்பலவர் தாமே எழுந்தருளி
இங்கு எமக்குப் பிச்சை இடு என்ன - அங்கு அமுது
திட்டமுடன் நமக்கு நீ தினமுமே சர்வ
கட்டளை உண்டாக்கு என்றார்காண்
- சிவன் சங்கமர் கோலத்தில் பிச்சை எடுத்தார்.
அல்லல் ஆகிய இருவினை அறுத்து அடி இணை தருவாரோ
மல்லல் நீடிய புலியின்மேல் இன்னம் முன் வரும் பிறப்பு அறுப்பாரோ
நல்ல மாமுலை மாது உமை நாயகர் நாளிகை நவின்றேத்தும்
தில்லை நாயகர் அம்பலத்து ஆடுவார் திருவுளம் தெரியாதே.
- என் இருவினை அறுப்பாரோ
- பிறப்பை அறுப்பபாரோ
- அம்பலத்து ஆடுவார் திருவ்வுளம் யாது எனத் தெரியவில்லையே
காதலுடன் சர்வ கட்டளையாய் உன்னுடைய
பாதமலர் பூசை பண்ணவே - ஓது
குருவாய் எனைத்தொண்டு கொண்டவனே பிச்சை
தருவாய் சிதம்பர நாதா
- குருவாக வந்து என்னைத் தொண்டனாக்கிக் கொண்டவனே!
- எனக்கு உன் பிச்சை தருக

No comments:
Post a Comment