Pages

Sunday, 15 March 2026

கால் வலிக்கவில்லையா

அம்பலவா ஓர்கால் ஆடினால் தாழ்வோமோ 
உம்பரெலாம் கண்டது எனக்கு ஒப்பாமொ - சம்புவே
வெற்றிக் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென
ஒத்துப் பதம் சலிக்குமோ 

  • பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர், தேவர்கள் காணும்படி நீ ஆடினாய் என்கின்றனர். 
  • நான் காணும்படி ஆடக்கூடாதா என வேண்டினார்
  • சிவன் அவர் காணும்படி ஆடினார்  

தூக்கிய கால் நோவாதோ துட்டன் முயலகன் மேல் 
தாக்கிய கால் தானும் சலியாதோ - வாக்கா 
தினவரதா தில்லைத் திருத்தாண்டவா நீ
அனவரதம் கூத்தாடினால் 

  • திருத் தாண்டவா! எப்போதும் ஆடிக்கொண்டிருந்தால் கால் வலிக்காதா?
  • ஆட்டம் உனக்குச் சலிக்காதா?  

நகுதந்தா தாதகி என் நாடகத்திற்கு ஏற்ற 
தகுதித் தாளும் சிலம்பும் தானாம் - மகுதப்பா
பாரே இனி அமையும் பொன் அம்பலத்தால் 
வாரே திருத்தாண்டவம் 

  • தாதகி (ஆத்தி) சிரிக்க ஆடுகிறாய் 
  • சிலம்பு ஒலிக்கிறது 
  • இது அம்பலத்தில் நீ ஆடும் தாண்டவம்.

வேடன்  எச்சில் மிக விரும்பும் வேளவன் தன் மேனி பொன்ற 
வாட நித்தம் காளியொடு அம்பலவர் சன்னிதிக்குக் 
கோடிலக்கம் கவிபாடும் குரு நமசிவாயர் அருள் 
பாடல் மெச்சி அம்பலர் பாதகச்சை அடியதே 

  • நீ கண்ணப்ப வேடன் எச்சிலை விரும்புவன்
  • காமவேளை எரித்தவன் 
  • அடியேன் குருநமச்சிவான் பாடலை விரும்புபவன்

வந்தீச்சுர வருடம் வைகாசி தேதி நவம் 
இந்து நால் நாழிகை ஏழரை மேல் - வந்த குரு
தானாம் அருணகிரி தாணு சிவலிங்கத்துள் 
ஆனான் நமச்சிவாயன். 

  • ஈஸ்வர வருசம் வைகாசி மாதம் 9 ஆம் நாள் இவர் இலிங்கத்துக்குள் ஐக்கியமானார். 

குகை நமசிவாய தேவரின் மாணாக்கர் குருநமசியர். இவர் பாடிய நூல் பரமராசிய மாலை. இது 100 பாடல் கொண்டது. அவற்றில் சில:  

வரலாற்று அற்புதங்கள் \ மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 170

தாதகி / ஆத்தி


No comments:

Post a Comment