கண்டம் கரியமலை கண் மூன்று உடைய மலை
அண்டர்களும் காண்டற்கு அரிய மலை - தொண்டர்க்குத்
தோன்றும் மலை நாளும் தொழுவார் எழுபிப்பை
மாற்றும் மலை அண்ணாமலை
- அண்ணாமலை சிவன் கண்டம் கருநிறம் கொண்டது. அவன் 3 கச் கொண்டவன். தேவர்களால் காண முடியாதவன். தொண்டர்களுக்கு மலையாகக் காட்சி தருபவன். தொண்டர் பிறப்பை மாற்றுவன்.
மாமா தவ நமசிவாயன் தினம் ஒரு வெண்
பாமாலை சாத்திப் பணியும் மலை - காமாதி
என்னுமலை தான் கடந்தோர் இன்பத் திருவுளத்தே
மன்னும் மலை அண்ணாமலை.
- நமசிவாயன் நாள் ஒன்றுக்கு ஒரு வெண்பா என்று இந்த நூலைப் பாடினார். காமம், வெகுளி, மயக்கம் கடந்தவர் உள்ளத்தில் நிலைத்திருப்பவர் அண்ணாமலை சிவன்.
குகை நமசிவாய தேவரின் மாணாக்கர் குருநமசியர். இவர் பாடிய நூல் அண்ணணாமலை வெண்பா. இது காப்பு 1 + 100 வெண்பா + நூற்பயன் 2 (103 வெண்பா கொண்டது. அவற்றில் சில:
வரலாற்று அற்புதங்கள் \ மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 170
No comments:
Post a Comment