இறைநிலை கண்ட எளிய இனிய தமிழோட்டம்
எவன் உயிர்க்கு உயிராய்
எள்ளும் எண்ணையும் போல்எங்கணும் இடையறா நின்றான்
எவன் அனைத்துலகும்
என்றும் காத்து அளிக்கஇறைமை சால்மூ உரு எடுத்தான்
எவன் முதல் இடை ஈறு இன்றி
எஞ்ஞான்றும்மறை மடி இருப்பான்
அவன் எனைப் புரக்க
திருக்களா நீழல்அமர்ந்த காரணனே
எள்ளுக்குள்எண்ணெய் போல் எல்லா உயிர்களுக்கும் உயிராய் இருப்பவன் எவன்? மூவுலகும் காத்தளிக்க மூன்று உரருவம் எடுத்தவன் எவன்? முதல், இடை, கடை என்று இல்லாமல் இடமாகவோ, காலமாகவோ இருப்பவன் எவன்? மறைவு என்னும் மடியில் இருப்பவன் எவன்? அவன் என்னைப் புரக்க களாமர நிழலில் இருக்கிறான்.
என்னை ஆள்பவன் என்னுள் இருப்பவன்
தன்னை யான் தொழத் தண்ணளி தந்தவன்
பொன்னை ஆளும் புயம் தொழ நின்றவன்
கன்னி பாகன் கருவைக்கு இறைவனே
பொன்னார் மேனியன்அம்மையப்பன்
உணராத நின் நிலையை நீ உணர்த்த உணர்ந்த பின்
புணராத தாள் தலையில் புகுந்தது எனப் புகழ் ஓங்கத்
தணவாமல் எனை உனக்குத் தந்து உருகி இரண்டு அற்றேன்
பண ராசச் சிலம்பு அணிந்த பழ மறை எம் பெருமானே
தணவாமல் = பிரியாமல்பணராசச் சிலம்பு - நாகமணி முத்துப்பரல் கொண்ட சிலம்பு
உந்தி வாளரா முடித்த பால் வண்ணனே உனது
புந்தி வேண்டுவது அன்றியே நரகிடைப் படினும்
முத்தி வேண்டிலேன் துறக்கமும் வேண்டிலேன் முனிவர்
சித்தி வேண்டிலேன் திராதிபர் சிறப்பே
இடுப்பில் கட்டியிக்கும் நாகம்பால் வண்ணம், திருநீற்றுக் கோலம்உன்னை அறிந்தது போதும்
சிறக்கத் தக்கது கருவையான் திருவடி தேயம்
மறக்கத் தக்கது மற்றுள சமயத்தின் மயக்கம்
துறக்கத் தக்கது இவ் உடம்பை நான் எனும் தொடர்பு
பிறக்கத் தக்கது நிவானந்த வாரியின் பெருக்கே.
(கருவை, கருகாவூர், திக்ககளாவூர், முல்லைவனநாதர் இருக்கை)
வரதுங்கராம பாண்டியர், திருக்கருவை அந்தாதி
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 157
No comments:
Post a Comment