Pages

Thursday, 19 March 2026

நாலு படி தேனும் உழக்குப் பாலும்

பதார்த்த குண சிந்தாமணி என்னும் நூல் புழக்ககத்தில் இருக்கும் நூல்களில் ஒன்று. 

பண்டைய செய்யுள் நூல்கள் சில உரைநடையில் உள்ளன. அவற்றையும் நடைமுறை அனுபவவங்களையும் கொண்டு இந்த நூல் செய்யப்பபட்டுள்ளது. 

இதற்கு மூலநூல் அகத்தியர் செய்த நூல் என்று கூறப்படுகிறது. 

இது வெண்பா, விருத்தம் என்னும் இருவகைப் பாடல்களால் அமைந்த நூல். இது அச்சாகவில்லை. அதில் உள்ள சில பாடல்கள்:

ஆதியும் நடுவும் இல்லா அம்பிகை பாகன் மேனாள் 
வேதனுக்கு உரைப்ப வேதன் மேகநாதனுக்குச் சொன்னான்
போதில் இந்திரனும் அகவ தேவர்க்குப் புகன்றது அன்றே 
கோதிலா அகவ தேவர் தன்வந்திரி கூறினாரே

  • ஆதி காலமும் நடப்பு காலமும் இல்லாதவன் அம்மையப்பன். 
  • அவன் வேதன் என்னும் பிரமனுக்குச் சொன்னான். 
  • பிரமன் இந்திரனுக்குச் சொன்னான். 
  • இந்திரன் தேவர்களுக்குச் சொன்னான். 
  • தேவர்கள் தன்வந்தி என்னும் மருத்துவருக்குக் கூறினர். 

நானாழி தேனுக்கு நன்பால் உழக்கு இட்டுத்
தானே பால் கண்டிடத் தக்கதாய் - மானே கேள் 
காய்ச்சியே கொண்டால் கனத்த விஷம் மாறி 
வாய்ச்சமுதம் ஆமே மது. 

  • நாலு படி தேனும் உழக்குப் பாலும் சேர்த்துக் காய்ச்சி மதுவாகப் புளிக்க வைத்துக் கொடுத்தால் விஷம் முறியும். 

ஏழாயிரம் வருடம் இருக்கலாம் காய சித்தி 
கீழாநெல்லிச் சமூலம் கேள் மின்னே! - வீழாது 
தாது வெகு வெட்டை தணியுமே தாரணியில்  
கோதுயர மேகம் போம் கூறு. 

  • கீழாநெல்லிச் செடியின் வேரை அரைத்துச் சாற்றைக் குடித்தால் பால்வினை நோயின் வெட்டை நீங்கும். 

வரலாற்று அற்புதங்கள் \ மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 196

No comments:

Post a Comment