அகத்தியர் சீட்சா விதி 200 என்பது ஒரு நூல்.
இதில் 294 பாடல்கள் உள்ளன.
- தச தீட்சை
- பிரணாயாமம்
- காயசித்தி நாற்பது (விருப்பம் போல் உடலை நிலைகொள்ளச் செய்தல்)
- முக்கோணம் (பதி. பசு, பாசம்)
- சிவபூசை ஆகியன பற்றி இந்த நூல் சொல்கிறது.
பரயோகத்தில் அனுபவிக்கும் நாதங்களைச் சித்தாந்த சாத்திரங்கள்
- சங்கு (ஊதல்)
- மணி (அடித்தல்)
- சேகண்டி (அடித்தல்) - எனக் காட்டுகின்றன.
இவற்றைப்பற்றி இந்த நூல் கூறுகிறது. இதனைத் தெரிவிக்கும் இந்த நூலின் கடைசிப் பாடல்
பணி மாறு காலத்தே மணியின் ஓசை
பாங்கான சேகண்டி நாத ஓசை
பணி மாறு காலத்தே மவுன தோத்திரம்
பத்தியுறும் வாலை கையில் லேகியத்தை
பணி மாறு காலத்தே சகல சித்தும்
பருவாகத் தா என்று கையில் வாங்கிப்
பணி மாறு காலத்தே பணிந்து தெண்டம்
பண்ணிடுவாய் பண்ணிடுவாய் தீட்சை முற்றே.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 197
No comments:
Post a Comment