Pages

Thursday, 22 January 2026

வாணியன் தாதன்

வாணியன் தாதன் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்நத ஒரு புலவன். 

இவனையும் கம்பனையும் தொடர்புபடுத்தி, தமிழ்நாவலர் சரிதை, தொண்டைமண்டல சதகம்  ஆகிய 2 நூல்களும் சில செய்திகளைக் கூறுகின்றன. இந்தச் சதகம் பாடியவர் படிக்காசுப் புலவர் (1675-ஆ700).

அந்தகக்கவி வீரராகவ முதலியார் வரையில் தொண்டைமண்டலத்தில் வாழ்ந்த புலவர்களின் செய்திகள் இவற்றில் கூறப்பட்டுள்ளன. 

இந்த நூலாசிரியர்கள் தாம் கேட்டறிந்த செய்திகளைக் கூறுகின்றனர். இவை அனைத்தும் உண்மை எஎன்று கூறுவதற்கில்லை. 

0

கம்பர் பாட்டு
வாணியர் குல்லத்தை இழிவு படுத்தல்

கூளம் பிடித்து எள்ளின் கோதுவைப் பானம் குலக் கவிக்கும்
காளம் பிடித்திடில் சின்னம் படும் மள்ளர் காதலியார் 
வேளம் பிடித்த கண் வெள்ளம் பிடிக்க வெம் பேய்க்கு இளம் பேய்
தாளக் பிடிக்கத் தனிவேல் பிடித்த சயதுங்கனே   

சோழன் செயதுங்கனே! புலவன் வாணியன் தாசன் எள்ளைச் செக்கில் ஆட்டி அதன் கோதாகிய பிண்ணாக்கைக் கூலியாகப் பெற்று வாழும் வாணியன் குலத்தில் பிறந்தவன். சின்னம் பிடித்துச் சங்கு ஊதிக்கொண்டு செல்லும் விருதினைச் சோழன் அவனுக்கு வழங்கினான். இது மறவர் குடிப் பெண்ணின் கண்ணில் காமன் தோன்றுவது போலவும், பிணம் தின்னும் பேய்க்குக் குட்டிப்பேய் தாளம் போடுவது போலவும் இருக்கிறது. 

இப்படிக் கம்பன் பொறாமையால் தாதனை இழிவுபடுத்தி மன்னனிடம் கூறுவதாக இந்தப் பாடல் உள்ளது.  


வாணியன் தாசன் பாட்டு
உவச்சர் குலக் கம்பன் செய்த மும்மணிக் கோவை முற்றிலும் பிழை

கைம்மணிச் சீர் அன்றிச் சீர் அறியாக் கம்பநாடன் சொன்ன
மும்மணிக்கோவை முதல் சீர் பிழை முனைவாள் எயிற்றுக்
பைம்மணித் துத்திக் கணம்மணிப் பாந்தள் படம் பிதுங்கச்
செம்மணிக் கண் பிதுங்க, பதம் போந்த  செயதுங்கனே  

படம் எடுக்கும் பாம்பு போல் கண் சிவந்து போரில் வென்ற சோழன் செயதுங்கனே! கோயிலில் மணியடிக்கும் குலத்தில் தோன்றிய கம்பனுக்கு செய்யுளில் உள்ள சீர் தெரியாது. அவன் பாடிய மும்மணிக்கோவை நூலில் முதல் சீரே பிழை. 

0

கம்பர் பற்றிய பாட்டு

ஓங்கிய செந்தமிழ்த் தாதற்கு அடிமை அவ்வூர் அதனால் 
நான் கவி சொல்வதும் இல்லை என்றே கம்பநாடன் சொல்ல 
ஆங்கு அவன் ஏறும் சிவிகை சுமந்தும் அடைப்பை இட்டுக்
தாம் கவி கொண்டதும் கூவம் தியாகசமுத்திரமே  (தொண்டைமண்டலச் சதகம்)  

புலவன் தாதனுக்கு அடிமைத்தொழில் செய்துவந்த ஊர் ‘கூவம் தியாகசமுத்திரம்’. அதனால் அந்த ஊரைப் போற்றிப் பாடக் கம்பன் மறுத்தான். அதனால் அந்த ஊர் மக்கள் கம்பனுக்குப் பல்லாக்கு தூக்கியும், அவன் போட்டுக்ககொள்ளும் வெற்றிலைப்பாக்குப் பெட்டியைத் தூக்கிச் சென்றும் தம் ஊரைப் போற்றிப் பாடும்படி வேண்ட, கம்பனும் பாடினான். இந்தச் செய்தியை இந்தப் பாடல் தெரிவிக்கிறது. 

0

பேணிய செந்தமிழ்த் தாதனுக்கே அன்பு பெற்றமையால்
நாணிய கம்பன் சிவிகையும் தாங்கி நயந்த தமிழ்
பூணிய நின்றதும் கொச்சாப்பு இலாது புகுந்து இன்னும்
வாணியன் தாதற்குத் தாது ஆனதும் தொண்டை மண்டலமே  (தொண்டைமண்டலச் சதகம்) 

இந்தப் பாடலும் மேற்கண்ட செய்தியைத் தெரிவிக்கிறது.. 

0

கம்பர், தாதன் - நட்பு

தாதா என்றாலும் தரு என்று சொன்னாலும்
தாதா என்றாலும் தருவனோ தாராதான்
தாதா என்றாலும் தரு என்று சொன்னாலும்
தாதா என்றாலும் தருவன் அம் தாதனே

தா  என்று வேண்டினாலும், கற்பகத்தரு என்று புகழ்ந்தாலும் தராதவன் தரமாட்டான். தாதன் அப்படி இல்லை. எத்தனை தடவை கேட்டாலும் தருவான். இப்படிக் கம்பர் தாதனைப் புகழ்ந்து பாடினார். இது  பகைமைக்குப் பின்னர் மாற்றம் அடைந்த நட்பு.

0

கம்பர் இறந்தபோது

இன்றோ நம்ப கம்பன் இறந்த நாள் இப் புவியில்
இன்றோதான் புன்கவிகட்கு ஏற்ற நாள் இன்றோதான் 
பூ மடந்தை வாழ, புவிமடந்தை வீற்றிருப்ப 
நாமடந்தை நூல் வாங்கும் நாள் (தாதன் பாடிய பாட்டு) 

கம்பன் இறந்தபோது கலைமடந்தை தன் தாலியை இழந்தாள் - என்று தாதன் கம்பனைப் போற்றுகிறான். 

0

வாணிதாசன் இராமாயனம் 18 ஆம் நூற்றாண்டு நூல். 
வாணிய தாசன், வாணிதாசன் - பெயர்களின் தொடர்பு எண்ணத்தக்கது. 

0

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 307

No comments:

Post a Comment