செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் - வள்ளல்
இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் இந்த வள்ளலைப் பாடிய புலவர்.
இவர் பாடிய பாட்டு மலைபடுகடாம்
தீயினன்ன ஒண்செங்காந்தள்
இது அந்தப் பாடலில் வரும் ஓர் அடி (145)
இதற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியார் ஆளவந்த பிள்ளையாசிரியர் கூறிய ஆனந்தக் குற்றம் பற்றிக் குறிப்பிடுகிறார்.
தீயினன்ன என்பதை
தீயின் அன்ன என்றும்
தீயின் நன்ன என்றும்
(தீயில் பட்ட நன்னன்) என்றும்
பொருள் தருவதால் இத்தொடர் ஆனந்தக் குற்றம்
இந்தக் குற்றத்தால் நன்னன் மாண்டான் என்று
ஆளவந்த பிள்ளையாசிரியர் ஆனந்தக் குற்றம் கூறினார்.
ஆனந்தக் குற்றம் என்பது இன்பமயக்கத்தில் தோன்றும் குற்றம்.
இந்த அடி அப்படிப்பட்ட குற்றம் உடையது அன்று என்று நச்சினார்க்கினியார் குறிப்பிடுகிறார்.
குற்றமுடையதாயின் சங்கப்புலவர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நச்சினார்க்கினியார் (14 ஆம் சூற்றாண்டு) விளக்கம் தருகிறார்.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 310
No comments:
Post a Comment