நம்பிகாளி என்பவர் ஒரு புலவர்.
யாதவ குலத்தவர்.
முருக பத்தர்.
முதல் குலோத்துங்கன் காலம் தொடங்கி இரண்டாம் குலோத்துங்கன் காலம் வரை வாழ்ந்தவர்.
நெற்குன்றவாணரைப் பாடி அவரிடம் பரிசில் பெற்று வாழ்ந்துவந்தார்.
நம்பிகாளிக்கு "யாம் விற்கும் பரிசனம் ஆகிவிட்டோம்" என்று நெற்குன்றவாணரே தம்மைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிகாளியின் ஊர் தொண்டைநாட்டு வல்லம் (திருவல்லம்)
நம்பிகாளி நெருவூர் வந்தபோது இவரது பத்தியில் அழுக்காறு கொண்டிருந்த அவ்வூர்ப் பிராணர்கள் "உம் பத்தியால் இந்தப் பட்ட மரத்தைத் தளிர்கச் செய்யுங்கள்" எனக் கூறினர்.
தெய்வத்தமிழ் என்னும் செம்மொழியும் அம்மோழி நேர்
செய்விப்பர் தேவர் எனல் தேற, - தெய்வம்
சுரந்து அளிக்கும் மா நெருவூர்ச் சோலையிலே பட்ட
மரம் தளிர்க்க இன்று வளர்ந்து
என்று பாடினார்.
மரம் தளிர்த்ததாம்.
இதனைக் கொங்குமண்டலச் சதகப் பாடல் ஒன்று
பரந்த கடல் உலகமெல்லாம் அறியப் பரமசிவன்
நிரந்தர்ரமாய் அருள் சண்முக வேலன் நல் நேயத்தினால்
புரந்தான் போற்றும் நெருவூரில் காழிப் புலவன் பட்ட
மரம் தழையக் காளி கவி பாடியதும் கொங்கு மண்டலமே
இப்படிக் குறிப்பிடுகிறது.
இப்பாடலில் காளி எனக் குறிப்பிடப்படுபவன் இந்த நம்பிகாளி.
"கம்பன் என்றும், கொம்பன் என்றும், காளி ஒட்டக்கூத்தன் என்றும் பேர் சொல்வரோ" என்று சொல்லப்படும் வழக்கு நம்பிகாளியை, கம்பனோடும், ஒட்டக்கூத்தனோடும் இணையாக வைத்துக் கூறுதல் இவ்வனது பெருமையை உணர்த்தும்.
பரணி தாழிசை 457 இவரது பெயரை நம்பிகாளி என்று குறிப்பிடுகிறது.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 299
No comments:
Post a Comment