Pages

Wednesday, 21 January 2026

கந்தியார் இடைச்செருகல்

கந்தி என்னும் கௌந்தி எனவும் வழங்கப்படும் என்று  சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது. 

இவை சமணப் பெண்துறவியைக் குறிக்கும் செற்கள். 

கௌந்தியை, சிலப்பதிகாரம் காவுந்தி ஐயை என்று குறிப்பிடுகிறது. 

சுமையைத் துணித்தொங்கலில் சுமக்கும் துணி-உறி கா எனப்படும். 

இந்தக் காவை உந்திக்கொண்டு (சுமந்துகொண்டு) செல்பவள் காவுந்தி.  

திருமணம் ஆகாமல் மூத்த பெண்துறவியை ஔவை என்று தமிழ்நூல்கள் காட்டுகின்றன. ஔவை போல் சமணத்தில் வாழ்ந்த பெண்துறவி கந்தி / கந்தியார்.   

0

வைணவத்தில் கந்தியார் இல்லை


பெயர்விழையான் என்னும் புலவர் செந்தமிழ் மாத இதழ் 20 ஆம் தொகுதில் ஒரு கட்டுரை தந்துள்ளார். பலபவித்திரட்டு என்னும் நூலிலிருந்து எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். "வைணவக் கந்தியார் செப்பும் வினாவும்" என்னும் தலைப்பில் கட்டுரையை எழுதியுள்ளார். வைணவக் கந்தியார் என்பது அவர் புனைந்துரை.  

வினா

கொண்டல் வண்ணன் கண்ட சுவைநலம் 
கண்டீர் உண்டீர் கேட்டீர் அறியீர்
துண்டம் எட்டே தொண்டை கொண்ட 
எண்திசை குத்தி ஞெண்டு உழு வேரல்
மண்டெறி ஈனா வெண்டளி அண்டம்
தண்டமிழ் பயில்வீர் கொண்டு உரைப்பீரே

கொண்டல் வண்ணனாகிய கண்ணன் உண்ட வெண்ணெய் உண்டு அதன் சுவைநலம் கண்டீர். கேட்டீர். உங்களுக்குத் தெரியுமா? எட்டுத் திசைகளையும் பார்க்க வல்ல நண்டு மூங்கில் புதரில் வளை தோண்டியிருந்தது. அண்டம் மண்ணைத் தெறிப்பது. எதையும் பெற்றெடுக்காத வெள்ளை வெண்டு போன்றது. தமிழ் தெரிந்தவர்களே! இதனை விளக்கிச் சொல்ல முடியுமா? - என்று வினவினர். 

0

அஞ்சிலோதி ஆடவை அஞ்சாய் - பாடி முடிக்குமாறு சங்கத்தார் கந்தியைக் கேட்டுக்கொண்டனர். 

இதற்குக் கந்தி பாடிய பாட்டு இது. 

செப்பு:

அஞ்சிலோதி ஆர் இடரால் பேரின்பு அமைந்திசின் ஏர்
அஞ்சிலோதி அன்றோ அறிதலின் நல் - அஞ்சிலோதி
அஞ்சிலோதி ஆரிப்படு நெல் அறைக்கரும்பு
அஞ்சிலோதி ஆடவை அஞ்சாய்

இவ்வாறு கந்தி பாடினார். 

அஞ்சிலோதி என்பது அழகிய சில கூந்தல்லை உடைய பெண் என்னும் பொருளை உணர்த்தும் அன்மொழித்தொகை.

0

சீவக சிந்தாமணியில் இடைச்செருகல் செய்தவர் கந்தியார் 


  • சீவகசிந்தாமணி பாடல்கள் 3145 
  • 3154 சமாஜம் பதிப்பு
  • 9 பாடல் மிகை
  • திருத்தக்க தேவர் பாடியவை 2700
  • மிகைப் பாடல்கள் கந்தியார் இடைச்செருகல்
  • உ வே சா, மு. அருணாசலம் இருவரும் சேர்ந்து ஆராய்ந்து இதனைக் கண்டறிந்தனர் 

0

பரிபாடல் - கந்தியார் பகுப்பு


பரிபாடல் நூலில் 
  • திருமால் பாடல் 8
  • செவ்வேள் பாடல் 31
  • காடுகாள் தேவி 1
  • வையை - 26
  • மதுரை - 4
  • மொத்தம் 70 பாடல்
என்று இந்தக் கந்தியார் ஒரு வெண்பாவில் வரையறுக்கிறார். 

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 294

No comments:

Post a Comment