"வேதம் தமிழ் செய்த மாறன்" என்று போற்றப்படுபவர் நம்மாழ்வார்.
இவர் சடகோபர் எனவும் குறிப்பிடப்படுகிறார்.
திருமால் கோயில்களில், பெருமாள் பாதம் தாங்கிய முடி, வழிபட வருபவர் தலையில் வைத்து எடுக்கம்பபடும், இந்த முடியைச் சடாரி என்பர். திருமால் சமயத் தமிழ் நூல்களில் நம்மாழ்வார் செய்த திருவாய்மொழி இந்தச் சடாரி போன்றது.
சடாரி போன்ற நூல் பாடியவன் சடகோபன்.
சடகோபனைப் போற்றும் நூல் சடகோபர் அந்தாதி.
இதில் 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் அந்தாதியாகத் தொடுக்கப்பட்டுள்ளன.
இதனைப் பாடியவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர்.
இவர் சரசுவதி அந்தாதி, ஏர் எழுபது ஆகிய நூல்பளையும் பாடியுற்றார்.
9 ஆம் நூற்றாண்டில் இராமாயணம் பாடிய கம்பர் இவருக்குக் காலத்தால் முற்பட்டவர்.
இந்த நூல் பத்திச் சுவையும், பண்பட்ட தமிழ்ச் சுவையும் கொண்டது.
திருமால் 11-வது அவதாரம் எடுத்துத் தன்னையே பாடிக்கொண்டார் என்று சடகோபரை இதன் பால் ஒன்று குறிப்பிடுகிறது.
💜
பொழி பலவாயின செப்பம் பிறந்தது முத்தி எய்தும்
வழி பலவாய விட்டு ஒன்றாயது வழுவா நரகக்
குழி பலவாயின பாழ்பட்டது குளிர் நீர்ப் பொருநைச்
சுழி பலவாய் ஒழுக்கும் குருகூர் எந்தை தோன்றலினே
பொருநை நீர் பாயும் குருகூரில் பிறந்த நம்மாழ்வார் திருவாய்மொழியால் தமிழில் செப்பம் பிறந்தது. வீடுபேறு ஒன்றாயிற்று.
அவரவர் தமதம தறிவறி வகைவகைஅவரவர் இறையவர் எனவடி யடைவர்கள்அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்அவரவர் விதிவழி யடையநின் றனரே - என்னும் திருவாய்மொழிப் பாடலில் - அவரவர் இறையவர் குறைவிலர் என்று முத்தி ஒன்றான செய்தி கூறப்பட்டிருக்கிறது.
💜
சொல் என்கேனோ முழு வேதச் சுருக்கு என்கேனோ எவர்க்கும்
நெல் என்கேனோ உண்ணும் நீர் என்கேனோ மறை நேர் நிறுத்தும்
கல் என்கேனோ முதிர் ஞானக் கலி என்கேனோ புகல
வல் என்கேனோ குருகூர் எம்பிரான் சொன்ன மாலையையே
திருவாய்மொழி, வேதச் சுருக்ககம், எல்லாருக்கும் உயர்ந்த உணவாகும் நெல், இன்றியமையா உணவாகும் நீர், வேதச் செய்திகளை நிறுத்துக் காட்டும் எடைக்கல், ஞான நீரின் துள்ளல், - எப்படிச் சொல்லி குருகூரான் சொல்மாலையைப் பாராட்டுவேன்.
💜
ஆயிரம் மாமறைக்கும் அலங்காரம் அருந்தமிழ்க்குப்
பாயிரம் நாற்கவிக்குப் படிச்சந்தம் பனுவற்கெல்லாம்
தாய் இரு நால் திசைக்குத் தனித் தீபம் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே
குருகூரான் செய்யுளானது, ஆயிரக்கணக்கான வேதங்களுக்கு அணிகலன், தமிழுக்கு அமைந்த பாயிரம், நான்கு வகையான பாடல்களுக்கும் அமைந்த ஓசைநலம், நூல்களுக்கெல்லாம் தாய், இருளில் எட்டுத் திசைகளும் தெரியும்படிக் காட்டும் ஒளிவிளக்கு.
💜
துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா இவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போய்
மற வாதியர் சொன்ன வாசகமாம் மலட்டு ஆவைப் பற்றிக்
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே
திருவாய்மொழி ஆயிரம் காட்டும் நெறியானதுஇல்லறத்தார் துறவறத்தார் யார் சொன்னாலும்அறம் சுரக்கும். இதனை விட்டுவிட்டுச் சில மறநெறியாளர் பால் வேண்டி மலட்டுப் பசு மடியைப் பிடித்துக் கறந்து கைவலியால் துன்புறுகின்றர்.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 280
No comments:
Post a Comment