சரசுவதி அந்தாதி நூலைக் கம்பர் பாடினார் எனக் குறிப்பிடுகிறோம்.
கம்பர் 9 ஆம் நூற்றாண்டில் இராமாயணம் பாடினார்.
இந்த அந்தாதி பாடிய கம்பர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
இந்த நூலில் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த 30 பாடல்கள் உள்ளன. அன்றியும் தொடக்கத்தில் 2 வெண்பாக்கள் உள்ளன. இந்த வெண்பாக்கள் பலராலும் போற்றப்படுபவை.
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை – தூய
உருப் பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.
64 என்று சொல்லப்படும் அனைத்துக் கலைகளும் சரசுவதி
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடி கமழ் பூந்தாமரை போல் கையும் – துடி இடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி
பெண் உருவில் இருக்கும் அவளைத் துதித்தால் கல்லும் கல்லும் கவி பாடும்
தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தம் தொழில் மறந்து
விழுவார் அருமறை மெய் தெரிவார் இன்பம் மெய் புளகித்து
அழுவார் இனும் கணுகள் நீர் மல்குவார் என்கண் ஆவது என்னை
வழுவாத செஞ்சொல் கலைமங்கைபால் அன்பு வைத்தவரே (25)
கலைகள்மீது அன்பு வைக்க வேண்டும்
உரைப்பார் உரைக்கும் கலைகள் எல்லாம் எண்ணில் உன்னைப் பற்றித்
தரைப்பால் ஒருவர் தர வல்லரோ தண் தரள முலை
வரைப்பால் அமுது தந்து இங்கு எனை வாழ்வித்த மா மயில் ஏனை
விரைப் பாசடை மலர் வெண் தாமரைப் பதி மெல்லியலே (3)
கலைமடந்தை உரு வெண்டாமரை மலரில் இருக்கிறது
பெருந்திவும் சயமங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்
இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றல் எல்லா உயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப் பொருளும் தரும்
திருந்திய செல்வம் தரும் அழியாப் பெருஞ்சீர் தருமே.
கலைமகளே திருமகள் ஆகிச் செல்வமும், சயமகள் ஆகி வெற்றியும் தருவாள்.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 278
No comments:
Post a Comment