எந்த அரசனின் கல்வெட்டு எப்படித் தொடங்குகிறது என்பதை அறிந்துகொண்டால், ஒரு கல்வெட்டின் தொடக்க வரிகளைக் கொண்டு இது எந்த அரசனின் கல்வெட்டு என்று அறிந்துகொள்ள முடியும்.
முதலாம் குலோத்துங்கன் (1111)
- ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு
விக்கிரம சோழன் (1123)
- திருபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ விக்கிரம சோழ தேவர்க்கு யாண்டு
இரண்டாம் குலோத்துங்கன் (1136)
- ஸ்ரீ இராசகேசரி பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு
இரண்டாம் இராசராசன் (1162)
- ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு
இரண்டாம் இராதிராசன் (1171)
- ஸ்ரீ ராசாதிராஜ தேவர்க்கு யாண்டு
மூன்றாம் குலோத்துங்க சோழன் (1188)
- ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் பாண்டியன் முடித்தலையும் மதுரையும் கொண்டருளின ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு
சடையவர்மன் வீரபாண்டியன் (1179)
- ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடைய கன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு
சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1192)
- மாமதிக்கலம் விளக்கிய கோ முதற்பேர்ச் சடையபன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு
இலங்கு அரசன் விசயபாகு (12 ஆம் நூற்றாண்டு)
- நமோ புத்தாய ஸ்ரீ லங்கா த்வீபத்து சூரிய வம்சத்து இக்ஷ்சுவாகுவின் வழிவந்த அநேக சத்ரு விசயம் பண்ணி அனுராதபுரம் புக்கு புத்த சாசனம் ரக்ஷ்க்க வேண்டி சங்க நியோகத்தரால் திருமுடி சூடி அருமந்ததில் நின்றும் சங்கத்தாரை அழைப்பித்து ...
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 323
No comments:
Post a Comment