Pages

Tuesday, 27 January 2026

புராண இலக்கணம்

புராண பஞ்ச லட்சணம் - என்பது பழந்தொடர். 
இலட்சணம் என்னும் சொல்லைத் தமிழில் இக்கணம் என்று கூறிவருகிறோம். 
லட்சணம் என்றால் அழகு
மொழி இலக்கணம் என்பது மொழியின் அழகைக் காட்டும் நூல்.

தொல்காப்பிய இலக்கணத்தை "இயம்" என்று அதன் பாயிரம் குறிப்பிடுபிறது.
இங்கு இயம் என்பது மொழியை இயம்பும் அழகு.
தமிழ்மொழி இயம்பும் பாங்கு தொல்காப்பியத்தில் இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 
இயல் என்பது உருவின் உறுப்பழகு. 

0

பஞ்சாங்கத்தில் 5 வகையான உறுப்புகள் இருப்பது போல புராணம் 5 வகையான அழகுகளைக் கொண்டிருக்கும். 
  1. சருக்கம்
  2. பிரதி சருக்கம்
  3. மன்வந்தரம்
  4. வம்சம்
  5. வம்சானுசரியம் 
என்று வடமொழியில் இதனைக் கூறுவர். 
தமிழில் 
  1. உலகத் தோற்றம்
  2. ஒடுக்ககம்
  3. கால அளவு
  4. முனிவர் மரபு
  5. அரசர் மரபு
என்று இதனைக் கூறலாம். 

0

  • உலக சிருஷ்டி
  • மனுவாதிகள் கால எல்லை
  • பண்டைய மொழி
  • அரச பரம்பரை
  • முனிவர் பரம்பரை

  • தலப் பெருமை
  • தீர்த்த மகிமை
  • மூர்த்திகளின் அவதாரம் (தோற்றம்)
  • அவர்களின் லீலைகள்
  • சமைய தருமங்கள் 

  • சரியை பகுதிக்குரிய விரதங்கள் 
  • துதிகள்
  • சகஸ்ர நாமங்கள்
  • மந்திரங்கள்

கிரியையாகிய 
  • பூசை
  • யோகம்
  • ஞானம்
  • கன்மம் 
  • பக்தி
முதலானவை புராண நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருக்கும். 

0

அருங்கலச் செப்பு என்னும் சைன சமய நூல் 
  • என்றும் உண்டாக்கி
  • இறையால் வெளிப்பட்டு நின்றதும்
  • பெய்ப்பொருள் காட்டி
  • உயிர்கட்கு அரண் ஆகி
  • துக்கம் கெடுப்பது
நூல் என்று குறிப்பிடுகிறது. (செய்யுள் 9, 10)

இந்த நூலின் 4 பாடல்கள் புராண நூல்கள் எவ்வாறு இருக்கும் என்று குறிப்பிடுகின்றன.  

சரிதம், புராணம், அருத்த கியானம்
அரிதின் உரைப்பது நூல் 
  • வரலாறு, புனைகதை, பொருளறிவு ஆகியவற்றை உரைப்பது நூல்
உலகின் கிடக்கையும் ஊழி நிலையும்
மலைவு இன்றி உரைப்பத் நூல் 
  • உலகின் இருப்பு, ஊழிக்காலத்தில் அதன் நிலைமை ஆகியவற்றை உரைப்பது நூல்
இல்லறம் ஏனைத் துறவறம் என்று இவற்றைப்
புல்ல உரைப்பது நூல்
  • இல்லறம், துறவறம் என்னும் வாழ்க்கை நெறிகளைக் கூறுவது நூல்.
கட்டொடு வீடும் உயிரும் பிற பொருளும் 
முட்டு இன்றிச் சொல்வது நூல் 
  • உயிர் பெறும் வீடு, உடல் பெறும் பொருள் ஆகியவற்றைக் கூறுவது நூல்
இந்த 4 பாடல் கூற்றுகளும் புராண இலகணத்துக்குப் பொருந்தி வருகின்றன. 

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
16 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், முன்னுரை, பக்கம் 3

No comments:

Post a Comment