Pages

Tuesday, 27 January 2026

தமிழ்ப் புராண நூல்கள் - பாகுபாடு

வடமொழி மரபை விட்டுவிட்டுத் தமிழில் உள்ள புராணங்களை நோக்குவோமானால், தமிழில் எண்ணற்ற பெருநூல்களும், சிறுநூல்களும் உள்ளன. 

இவை கூறும் பொருளையும், நூலின் அமைப்பையும் கொண்டு பார்த்தால் அவற்றில் ஆறு வகையான பாகுபாடுகள் இருப்பதைக் காணமுடியும். 
  1. மகாபுராணம்
  2. இதிகாசம்
  3. சிவபராக்கிரமம், சிவதருமம்
  4. தலபுராணம்
  5. அடியார் வரலாறும் பிற வரலாறும்
  6. சாதிப் பெருமை  
இவற்றைச் சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளங்கிக்கொள்ளலாம். 

1

மகாபுராணம்


வடமொழி மகாபுராணத்தை அப்படியே மொழிபெயர்த்தவை இந்த வகையின. 
எடுத்துக்காட்டு (அந்தப் புராணம் தோன்றிய நூற்றாண்டு அதன் அருகில் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன)

சைவத்தில்
  • கூர்ம புராணம் (16) 
  • இலிங்க புராணம் (16)
  • மச்ச புராணம் (18)
  • வைணவத்தில்
  • பாகவதம் 1 (16)
  • பாகவதம் 2 (16)
ஆகியவை செய்யுள் வடிவில் உள்ளன.
 
  • சைவ மகாபுணம் (19)
  • வைணவ மகாபுராணம் (19) 
ஆகியவை உரைநடை வடிவில் உள்ளன

இவற்றில் சிவ விஷ்ணு பராக்கிரமங்களும் சிவதர்மம் சிவபுண்ணியம் போன்றவைகளும் விரவி வருகின்றன. 
  • சைவ புராண 12 சங்கிதைகளில் வாயுசங்கிதை (16)
  • காந்த புராணத்தில் சில பாகங்களாக உள்ள கந்தபுராணம் (14)
  • உபதேச காண்டம் (15) 
ஆகியவை  செய்யுள் வடிவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 
  • மார்க்கண்டேய புராணத்தில் சில பாகங்கள் உரைநடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

2

இதிகாசம் 


  • கந்த புராணம் (14)
  • பாகவதம் (16)
  • விநாயக புராணம் (18) 
போன்றவை மகாபுராணத்தின் பகுதியாகவும், காவிய அமைப்போடு தெய்வ வரலாற்றைக் கூறுவனவாகவும் உள்ளன. 

3

சிவதர்மம் சிவபுண்ணியம் 


வடமொழி புராணத்தின் பகுதி என்பதைக் காட்ட சங்கிதை, கண்டம், காண்டம் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டு
  • உபதேச காண்டம் (15)
  • பிரமோத்திர காண்ணடம் (16)
  • வாயு சங்கிதை (16)
  • காசி காண்டம் (16) முதலானவை
சிவ தருமோத்திரம் என்னும் நூலும் இவ்வகையுள் அடங்கும். இதனை ஆகமம் எனக் கூறுவதும் உண்டு. 

4

தலபுராணம்


  • நம்பி திருவிளையாடல் (13)
  • கோயிற்புராணம் (14)
  • அருணாசல புராணம் (16)
  • பரஞ்சோதி திருவிளையாடல் (18)
  • குற்றால புராணம் (18)
  • காஞ்சிப் புராணம் (18)
  • தணிகைப் புராணம் (19)
முதலானவை தலபுராணங்கள். 
  • ஒரு தலத்தில் எழுந்தருளியுள்ள சிவன் அல்லது திருமால் பெருமை இதில் கூறப்பட்டிருக்ககும். 
  • தீர்த்தத்தின் பெருமை
  • பூசித்துப் பேறு பெற்றவர் வரலாறு
  • கடைப்பிடிக்க வேண்டிய தரும நெறிகள்
  • விலக்கத்தக்கனவாகிய அதர்மங்கள்    
  • நாட்டுச் சிறப்பு
  • நகர்ச் சிறப்பு 
முதலானவற்றோடு காவிய நயத்துடன் இவை அமைந்திருக்கும். 

  • திருவாரில் பிறந்தால் முத்தி
  • தில்லையைத் தெரிசிக்க முத்தி
  • காசியில் இறக்க முத்தி
  • திருவண்ணாமலையை நினைக்க முத்தி

என்றெல்லாம் தலபுராணங்கள் கூறுகின்றன. 

மற்றும்
  • திருக்குருகூர் மான்மியம் (16)
  • கூடல் புராணம் (16) 
  • திருவேங்கடத் தலபுராணம் (18)
போன்றவையும் பழந்தமிழ்ப் புராணங்கள். 

5

அடியார் வரலாறு கூறும் புராணங்கள் 


  • பெரியபுராணம் (12)
  • சேக்கிழார் புராணம் (14)
  • திருவாதவூர் அடிகள் புராணம் (15) 
சைவம்

  • அரி சமய தீபம் (17)
  • வடிவழகிய நம்பி தாசர் பாடிய குரு பரம்பராய பிரபவம் (18)
  • திவ்விய சூரி சரிதம் (19) 
வைணவம் 

  • குரு பரம்பராய பிரபாவம் ஆறாயிரப்படி (13), 
  • மூவாயிரப்படி, 
  • பன்னீராயிரப்படி
ஆகியவை மணிப்பிரவாள நடையில் தமிழில் தோன்றிய மூல நூல்கள்.. வடமொழியிலிருந்து மொழிபெயர்க்ககப்பட்டவை அல்ல. 

20 ஆம் நூற்றாண்டில் பழைய மரபைத் தழுவி, மொழிபெயர்ப்பு அல்லாத புதிய புராணங்கள் பல தோன்றின. 
அவற்றுள் அடியார் பற்றிய புராணங்கள்: 
  • தண்டபாணி சுவாமிகள் பாடிய அருணகிரி நாதர் புராணம்
  • வாளூர் சொக்கலிங்கம் பிள்ளை பாடிய சேய்த்தொண்டர் புராணம்
  • வாமதேவ முருக பட்டாரகர் பாடிய கச்சியப்ப சிவாசாரியார் புராணம்
  • அசலாம்பிகை அம்மை பாடிய இராமலிங்க சுவாமி புராணம்
19 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை
  • பட்டினத்துப் பிள்ளை புராணம்
  • சடகோப திவ்ய சரிதம்
இவை செய்யுள் வடிவில் உள்ளன

தண்டபாணி தேசிகர் பாடிய 
  • புலவர் புராணம்
  • அசலாம்மபிகை பாடிய 
  • திலகர் புராணம், 
  • காந்தி புராணம், 
  • ஆறுமுக நாவலர் சரித்திரம் 
ஆகியவை அடியார் அல்லாதவர் மீது படப்பட்டுள்ளன. 

6

சாதிப் பெருமை


17, 18 ஆம் நூற்றாண்டுகளில் சாதிகளை உயர்த்திச் சொல்லிப் பாடுகின்ற சிற்றிலக்கியங்கன் தோன்றியுள்ளன. 
  • ஈட்டி எழுபது
  • செம்பொன் சிலை எழுபது
  • வாள் எழுபது 
  • வைசியப் பள்ளு
  • பந்தன் அந்தாதி
  • செங்குந்தர் பிள்ளைத்தமிழ்
  • செங்குந்தர் புராணம்
  • விசுவகர்மர் புராணம்
  • சீர்கருணர் புராணம்
  • சான்றார் புராணம்
  • குலாலர் புராணம்
  • வீரநாராயண விசயம்

தமிழ்நாட்டில் சிவாலயங்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளன. திருமால் ஆலயங்கள் 200-க்கும் குறைவு.

சைன புராணங்கள் 
காந்தி புராணம்
மேருமந்திர புராணம்
ஸ்ரீ புராணம் 
போன்றவை பாடல்களாவும்
 
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
16 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், முன்னுரை, பக்கம் 17

No comments:

Post a Comment