வரகுணராமர் செய்தவை 2 புராணங்கள்.
அவற்றில் இது முதலாவது.
154 அதியாயங்களில் 2506 பாடல்கள் கொண்டது.
0
முதல் காண்டம் தக்கன், சலந்தரன், அந்தகாசுரன் கதைக்கள் கூறுகிறது.
பஞ்ச மூர்த்தம், அட்ட மூர்த்தம், அட்டாங்க யோகம், பிரணவம், காசித்தலம் முதலானவை பேசப்படுகின்றன.
ஒளிபோல் உன்னற்கு அரிய பரஞ்சுடரை உன்னி உன்னி விழுங்கி, தன்னை அறிந்து தலையிருத்தல் சமாதி என்று இந்த நூல் கூறுகிறது.
மகாலிங்கம் முதலான இலிக்கத்தின் பல்வகைத் தோற்றங்கள் இதில் பேசப்படுகின்றன.
0
மாணிக்கவாசகரைப் போற்றும் பாடலில் புத்தரைச் செக்கில் இட்ட புதுமையான செய்தி ஒன்று கூறப்படுகிறது.
0
துதிப்பாடல்
பருதி அதனுள் விரி வெயிலாய்
மதியில் நிலவாய் வளி அதனுள்
ஊறாய் கனலுள் உருவமாய்
திரை சேர் புனலுள் உறு சுவையாய்
திண் மாநிலத்தில் உறு மணமாய்
மருவி உறையும் மணிமிடற்று
வரதா நின்னைத் தொழுதேமே.
வெயில், நிலவொளி, உரசும் காற்றாய், நீரில் சேரும் சுவையாய், மண்ணில் மணமாய் விளங்குபவன் மணிமிடற்று வரதன்.
0
சிவன் பிச்சை எடக்க வந்தபோது அவனைக் கண்டு காமுறுவதாக 30 பாடல்கள் உள்ளன. அவற்றுள் சில:
0
சோலை உறை கிள்ளை வளை சூழ் தளிரின் ஏந்தி
பால் அனைய மென்மொழி பயிற்றலும் மறந்து
கால மணிமேகலை தளர்ந்தது மருங்கு என்று
ஓலமிட மாதர் சிலர் ஓகையின் நடந்தார்
உவகையில் கிளி போல் பேசிக்கொண்டு, தன் ஆடை இடுப்பில் நழுவுவது தெரியாமல் சில மகளிர் நடந்துவந்தனர்
0
மெல் அடிய பஞ்சு நிலை மேவ நிலம் மீள
ஒல்லையில் அலத்தகம் அணிந்த வகை ஒப்பச்
செல்லுமவர் சீறடி சிவப்ப எழில் மேவும்
வல்லி என அன்ன நடை மாதர் சிலர் வந்தார்
பஞ்சு போன்ற அடிகள் நிலத்தில் படுவதால் சிவப்பாக மாறும்படி சிலர் கொடி போல் ஆடி நடந்து வந்தனர்.
0
வார் குழலின் மீது புனை வாச முழு நீலம்
ஆரும் விடம் இன் அமுதம் ஆக்கும் விழி பாய
பாரின் மிசை விழுமவை போல் பரிய ஓடிக்
கார்மயிலை அன்ன சில கன்னியர் அடைந்தார்
தலையில் சூடிய நீலமலர் கண்ணின் விடத்தை அமுதமாக்க, மயில் போன்ற கன்னியர் சிலர் வந்தனர்.
0
கோடுபடு வெம்முலை குளித்து உதிரம் மூழ்கும்
ஆடல் மதன் வாளி குறம் வீழ்வது எனல் ஆகிப்
பாடக மென் சீறடிய பஞ்சு கட ஐம்பால்
சூடும் மலர் சிந்த மட மாதர் சிலர் வந்தார்
வளைந்த முலையில் செம்பஞ்சுக் பூசிக்கொண்டு, காமன் அம்பு போல் சிலர் வந்தனர்.
0
பண்ணிசையினால் உயிர் ஈர் படுத்து உலவும் செவ்வாய்
அண்ணல் இரு தாளும் உயர் தோளும் அகல் மார்பும்
கண் இணை களிப்ப எழு காதல் மிக நோக்கி
பெண் அமுதமாய் ஒரு பேதை குழைவுற்றாள்
சிவனின் பண்ணிசை பாடும் செவ்வாய், தாள், தோள், மார்பு ஆகியவற்றைக் கண்டு பேதை ஒருத்தி குழைந்தாள்.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
16 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 11
No comments:
Post a Comment