தமிழில் புராணம் செய்த ஆசிரியர்கள் 22 பேர்.
இவற்றறில் 5 பேர் புராணம் கிடைக்கவில்லை.
கிடைத்த புராணங்களில் சுமார் 60 ஆயிரம் பாடல்கள் உள்ளன.
புராணங்கள் சிறந்த இலக்கியச்சுவை கொண்டவை.
400 ஆண்டு கால மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை.
நீதிகள், ஆட்சிமுறை, நாட்டு வருனணை, அகத்துறை ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.
போர் பற்றி எழுதும் இவர்கள் போர்வீரர்கள் இல்லை, எழுதுகோல் வீரர்கள். சுவைக்காக யமகம், திரிபு, மடக்கு பாடல்களைக் கையாளுகின்றனர்.
மரங்கள் என்று என்று வந்தால் தமக்குத் தெரிந்த மரங்களையெல்லாம் அடைமொழிகளோடு அடுக்குகின்றர்.
சமயம் என்று வந்தால் பூசை, சடங்கு வகைவளைப் பேசுகின்றனர். வைணவம் என்று வந்தால் தசாவதாரம், ஆழ்வார்கள் பற்றிய செய்திகளைக் கூறுகின்றனர்.
ஒழுக்கநெறி பிறழ்ந்தால் நரகம் என்று காட்டுகிறார்கள். நரக வகைகள், அவற்றில் படும் துன்பங்கள் போன்றவற்றை கற்பனை செய்துகொண்டு பாடுகிறார்கள்.
பேய்களைப் பாடுகின்றனர். மருத்தும் பற்றிப் பேசுகின்றனர். அரசு அன்று கொள்ளும் தெய்வம் நின்றுகொல்லும் என்று மெய்ப்பிக்கிறார்கள். தெய்வத்தை வேண்டுதல் நிகழ்கிறது.
வீரை ஆளவந்தார் வடமொழி ஞான வாசிட்டத்தைத் தமிழில் 2000 செய்யுள்களில் பாடியுள்ளார்.
வரதுங்க ராம பாண்டியன் மனைவி, எல்லப்ப நாவலர் மனைவி ஆகியோர் நூல் செய்யாவிட்டாலும் தமிழில் புலமை மிக்கவராக விளங்கினார்.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
16 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் முன்னுரை
No comments:
Post a Comment