Pages

Monday, 26 January 2026

தமிழ் பாடிய பாண்டியர்

மூன்றாம்  இராசேந்திர சோழன் (1279) மகப்பேறு இல்லாமல் போனான். அதனால் சோழர் ஆட்சி முடிவடைந்தது. 

அவன் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டுகொண்டிருந்தவன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251-1271). இவன் மூன்றாம் இராசேந்திரனை வென்றதோடு, இவனுக்குப் பாதுகாக்காக விளங்கிய கண்ணனூர்ப் போசளரையும் வென்றான். 

அடுத்த சிறப்புடைய பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் குலச்சேகர பாண்டியன் (1268-1310). 

இந்தப் பாண்டியனின் படைத்தலைவன் ஆரிய சக்கரவர்த்தி என்பவன் இலங்கை  மன்னன் பராக்கிம பாகு என்பவனை வென்று இலங்கையில் இருந்த புத்தர் பல்லைக் கைப்பறிக் கொண்டுவந்துவிட்டான். இலங்கை மன்னன் பாண்டியனைப் பணிந்து வேண்டி, புத்தர் பல்லை மீட்டுக்கொண்டு சென்றான். 

இந்தக் குலசேகரன் பிள்ளைகள் இருவர். 
  1. பட்டத்தரசியின் மகன் சுந்தர பாண்டியன். 
  2. காதல் கிழத்தியின் மகன் வீரபாண்டியன்.  
வீரபாண்டியன் இளையவன். 
குலசேகர பாண்டியன் வீரபாண்டியனுக்கு இளவரசு பட்டம் கட்டினான் (1296). 

இதனால் சினமடைந்த சுந்தர பாண்டியன் தந்தையைக் கொன்று (1310) முடி சூடிக்கொண்டான். 

இவன் ஆட்சி நிலைக்கவில்லை. 
வீரபாண்டியன் தாக்கியபோது தோற்றான். 

0

அப்போது டில்லியில் ஆட்சி புரிந்தவன் அல்லாவுதீன் கில்ஜி 
அவனது படைத்தலைவன் மாலிக்காபூர்.
இவன் தென்னாடு வந்திருந்தான்.  

சுந்தர பாண்டியன் இவன் துணையை நாடினான். 

மாலிக்காபூர் படையுடன் வந்து வீரபாண்டியனை அழித்ததோடு அல்லாமல் தன்னை அழைத்துவந்த சுந்தரபாண்டியனையும் அழித்தான்.

0

மாலிக்காபூர் பாண்டியநாட்டைச் சூறையாடி, செல்வங்களை  டில்லிக்குக் கொண்டுசென்றான். 

டில்லி கொண்டு சென்ற செல்வம்
  • 612 யானை
  • 20 ஆயிரம் குதிரை
  • 96 ஆயிரம் மணங்கு பொன், முத்து அணிகலன்கள் 
பின்னர் சுமார் 1330 -1378 வரை மதுரையில் முகமதியர் ஆட்சி. 

அப்போது இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு அங்கிருந்த செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 
கோயில்களில் வழிபாடு இல்லை. 

0

பின்னர் விசயநகர வேந்தர் தலைவன் குமார கப்பண்ணன் 1363-ல் தென்னாடு நோக்கிப் படையெடுத்துவந்து முகமதியர் ஆச்சியை 1378-ல் முடித்தான். 

மதுரையைப் புதுப்பித்தான். 

0

மதுரை அயலவர் ஆட்சியில் இருந்தபோது ஓடி ஒளிந்த பாண்டியர் கொற்கை, கருவை, தென்காசி ஊர்களில் சில காலம் இருந்துகொண்டு நாடாண்டனர். 

மன்னர் மரபினர் ஆனதால் அவர்கள் தம்மைப் பாண்டியர் எனக் கூறிக்கொண்டனர். 

அவர்களில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் (1411-1463) தென்காசி விசுவநாதர் கோயிலைப் புதுப்பித்தான். சிற்பங்களுடன் கோயிலைப் புதுப்பித்தான்.

0

இவன் வழிவந்த மூவர் தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்தனர். 
  1. சடையவர்மன் பராக்கிரம குலசேகரன் (1543-1588 வரை) - இவன் தலைநகர் கருவை
  2. இவன் தம்பி நெல்வேலி மாறன். இவன் திருநெல்வேலிப் பெருமாள் என்றும் கூறப்படுகிறான், (1552-1564) - தலைநகர் தென்காசி - இவன்மீது வீரவெண்பாமாலை ஒன்று புனையப்பட்டுள்ளது. 
  3. இவன் மகன் அதிவீர  ராம பாண்டியன் (1564-1604) 
  • இவன் மகன் 3 பேர் (இந்த மூவரும் தமிழில் நூல்கள் இயற்றினர்)
1

வரகுணராமன் (பட்டம் ஏறவில்லை)  
இவனைக் குலசேகர பாண்டியன் என்றும் கூறுவது உண்டு 
1560-1600 
முதலில் கருவையிலும் பின்னர் தென்காசியிலும் வாழ்ந்தான் 
  1. வாயு சங்கிதை, 
  2. இலிங்க புராணம் 
ஆகிய நூல்களை இயற்றினான். 
குரு: அகோர சிவம்

2

வரதுங்கராமன்  
1588-1613? 
தலைநகர் கருவை 
  1. பிரமோத்திர காண்டம், 
  2. கருவை அந்நதாதிகள், 
நூல்களை இயற்றினான் 
குரு: வேபற்றூர் ஈசான முனிவர்

3

சீமாறன் என்னும் அதிவீரராமன் 
(சிற்றப்பனால் தத்து எடுக்கப்படவன். 
1564-1610 
தலைநகர் தென்காசி 
  1. நைடதம், 
  2. காசி காண்டம், 
  3. கூர்ம புராணம், 
  4. வெற்றிவேற்கை 
நூல்களை இயற்றினான் 
குரு: சாமிதேவர்
 
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
16 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 1

No comments:

Post a Comment