Pages

Wednesday, 28 January 2026

புராணத்தில் கவசம்

சில புராண நூல்களில் கவசம் என்னும் தோத்திரப்பகுதி உள்ளது. 

போர்வீரர்கள் தோலாலும், இரும்பாலும் செய்யப்பட்ட கவசங்களைத் தம் உடலில் அணிந்துகொண்டு போரிடுவது வழக்கம். பகைவரின் வாள், வேல், அம்பு தாக்காமல் அவர்கள் அணிந்துள்ள கவசம் அவர்களுக்குப் பாதுகாப்பு தரும். 

அதுபோல இறைவன் பெயரைச் சொல்லி "என் இன்ன உறுப்பைக் காக்கவைண்டும்" என்று வேண்டினால், அந்தக் கடவுள் வேண்டுபவரின் அந்த உறுப்பினைக் காப்பாற்றுவான் என நம்பினர். 

இவை தோத்திரக் கவசம். சில புராண நூல்கள் இப்படித் தோத்திரம் செய்து இன்னார் பயன் அடைந்தார் என்று கூறுகின்றன. 

0

சிவ கவசம் 

  • (சக்தி கவசம்) - வரதுங்க ராம பாண்டியர் பாடிய பிரமோத்திர காண்டம் நூலில் அத்தியாயம் 12-ல் 20 பாடல்கள் கவசப் பாடல்கள். இது பத்திராயு என்னும் அரசகுமரனுக்கு விடபமுனிவர் அருளிச் செய்த சக்தி கவசம். (இது வச்சிர-பஞ்சாங்கம் என்னும் பெயரில் சொல்லப்பட்டுள்ளது) 
  • (உமாதேவி கவசம்) - அதிவீர ராம பாண்டியர் பாடிய காசி காண்டம் என்னும் நூலில் அத்தியாயம் 72-ல் 13 பாடல் (இது துர்க்கன் என்னும் அரக்கனை வதைத்த உமாதேவியைத் தேவர்கள் துதித்தது)
  • (இலக்குமி கவசம்) - காசிகாண்டம் நூலில் அத்தியாயம் 5-ல் 7 பாடல் இலக்குமி கவசம். (அகத்திய முனிவர் துதித்தது)
  • (இலக்குமி கவசம்) - காசிகாண்டம் அத்தியாயம் 10-ல் 8 பாடல் (சிவசன்மா துதித்தது)
  • (நாராயண கவசம்) - மாக புராணம் - மார்க்கண்டன் பிறப்புரைத்த அத்தியாயம் - 17 பாடல் 
  • (விசிவரூப கவசம்) - செவ்வை சூடுவார் பாகவதம் - கந்தம் 6 - அத்தியாயம் 4 - 25 பாடல் - விசுவரூபன் இந்திரனுக்கு உரைத்தது. 
  • கந்தசஷ்டி கவசம் - தேவராய சாமி பாடியது - 18 ஆம் நூற்றாண்டு - அகவல் பா
  • விநாயக கவசம் - 9 பாடல் - கச்சியப்ப முனிவர் பாடியது - 18 ஆம் நூற்றாண்டு 
  • சண்முக கவசம் - 30 பாடல் - பாம்பன் குமர குருபரசாமி பாடியது -  20 ஆம் நூற்றாண்டு 
15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் போர்கள் மிகுந்தன. அதனால் இறை நம்பிக்கையில் கவசங்களைப் பாடினர். 
  • இடும்பன் கவசம்
  • கடம்பன் கவசம்
ஆகியவை பிற்காலத்தில் மக்கள் பேசும் வழக்கு மொழியில் தோன்றியவை.  

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
16 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், முன்னுரை, பக்கம் 7

No comments:

Post a Comment